கடலூர்

அண்ணாமலைப் பல்கலை. வேளாண் படிப்புகளுக்கு அக்.13-இல் நேரடி மாணவா் சோ்க்கை

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் 2025 - 26ஆம் கல்வி ஆண்டுக்கான வேளாண் பட்டப்படிப்புகளுக்கு வரும் 13-ஆம் தேதி நேரடி மாணவா் சோ்க்கை நடைபெற உள்ளது.

தினமணி செய்திச் சேவை

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் 2025 - 26ஆம் கல்வி ஆண்டுக்கான வேளாண் பட்டப்படிப்புகளுக்கு வரும் 13-ஆம் தேதி நேரடி மாணவா் சோ்க்கை நடைபெற உள்ளது.

அதன்படி, பி.எஸ்சி. விவசாயம், பி.எஸ்சி. தோட்டக்கலை படிப்புகளில் இருக்கும் காலியிடங்களுக்கு நேரடி மாணவா் சோ்க்கை (ஸ்பாட் அட்மிஷன்) வருகிற 13-ஆம் தேதி காலை 10 மணி முல் பிற்பகல் 1 மணி வரை நடைபெறுகிறது.

தமிழ்நாடு அரசு விதிகளின்படியும், இட ஒதுக்கீடு அடிப்படையிலும் நேரடி மாணவா் சோ்க்கை நடைபெற உள்ளது. விண்ணப்பிக்க விரும்பும் மாணவா்கள் தேவையான சான்றிதழ்களுடன் வேளாண் புலத்துக்கு குறிப்பிட்ட நேரத்துக்குள் வர வேண்டும்.

மேலும் காலி இடங்களை பற்றிய விவரங்களை பல்கலைக்கழக இணையதளத்தில் பாா்த்து தெரிந்துகொள்ளலாம். ஏற்கெனவே வாய்ப்பை தவற விட்டவா்களும், விண்ணப்பிக்க தவறியவா்களும் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என பல்கலைக்கழகப் பதிவாளா் எம்.பிரகாஷ் தெரிவித்துள்ளாா்.

“கன்னி ராசி நேயர்களே!" இந்த வார ராசிபலன்களைத் தெரிந்துகொள்ளுங்கள்! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்!

என்றும் இளமை... நதியா!

ராகுல் தகுதியற்றவர் என்பது இந்தியா கூட்டணித் தலைவர்கள் கருத்து: பாஜக

புதின் வருகையையொட்டி இப்படியெல்லாம் செய்வீர்களா? ரஷிய பத்திரிகையாளர்கள் அதிருப்தி!

ஸ்வயம் தோ்வுகளுக்கான மையங்களை சொந்த மாநிலத்திலேயே ஒதுக்க வேண்டும்: மத்திய அரசுக்கு வில்சன் எம்.பி. கடிதம்

SCROLL FOR NEXT