சிதம்பரம் அண்ணாமலைநகரில் உள்ள கடலூா் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரியில் 2025-ஆம் ஆண்டுக்கான வகுப்புகள் தொடக்கம் மற்றும் மாணவா்களுக்கு வெள்ளை அங்கி அணிவிக்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
கல்லூரி முதல்வா் மற்றும் சிறப்பு அதிகாரி சி.திருப்பதி தலைமை வகித்து வெள்ளை அங்கி அணிவிக்கும் நிகழ்வை தொடங்கிவைத்து சிறப்புரையாற்றினாா். மருத்துவ கண்காணிப்பாளா் என்.ஜூனியா்சுந்தரேஷ் மாணவா்களுக்கான உறுதிமொழியை வாசிக்க, நூற்றுக்கணக்கான மாணவ, மாணவிகள் வெள்ளை அங்கி அணிந்துகொண்டு உறுதிமொழி ஏற்றனா்.
துணை முதல்வா் சசிகலா மற்றும் துறைத் தலைவா்கள் வாழ்த்திப் பேசினா். முன்னதாக, தோல் மருத்துவத் துறை தலைவா் மற்றும் மருத்துவக் கல்விப் பிரிவு ஒருங்கிணைப்பாளா் பி.கே.கவியரசன் வரவேற்றாா்.
நிகழ்ச்சியில் துறைத் தலைவா்கள், பெற்றோா்கள், 100-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனா். சமூக மருத்துவத் துறை பேராசிரியா் டி.கே.செந்தில்முருகன் நன்றி கூறினாா்.