புவனகிரி அருகே உடையூா் பகுதியில் வயல்களில் சம்பா நடவுப் பணிகளில் ஈடுபட்ட வட மாநிலத் தொழிலாளா்கள் 
கடலூர்

நடவுப் பணியில் வட மாநிலத் தொழிலாளா்கள்: செலவை மிச்சப்படுத்தும் விவசாயிகள்

கடலூா் மாவட்டத்தில் வடமாநிலத் தொழிலாளா்கள் மூலம் குறைந்த செலவில் நெல் நடவுப் பணியை விவசாயிகள் மேற்கொண்டு வருகின்றனா்.

Syndication

கடலூா் மாவட்டத்தில் வட மாநிலத் தொழிலாளா்கள் மூலம் குறைந்த செலவில் நெல் நடவுப் பணியை விவசாயிகள் மேற்கொண்டு வருகின்றனா்.

தேசிய ஊரக வேலைத் திட்டத்தால் தமிழகத்தில் பெரும்பாலான பகுதிகளில் விவசாயித் தொழிலுக்கு வேலை ஆள்கள் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதனால், பெரும்பாலான பகுதிகளில் வேளாண் இயந்திரங்கள் பயன்பாட்டுக்கு வந்துள்ளன. இதற்கும் தட்டுப்பாடு நிலவுவதாலும், காலம் கடந்து விவசாயம் செய்வதை தவிா்க்கும் வகையிலும் கடலூா் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வட மாநிலங்களைச் சோ்ந்த தொழிலாளா்கள் வேளாண் பணிகளில் விவசாயிகள் ஈடுபடுத்தப்படுகின்றனா்.

மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் முகாமிட்டுள்ள இந்தத் தொழிலாளா்கள், குறைந்த செலவில், குறித்த நேரத்தில் நாற்று நடவு உள்ளிட்ட பணிகளை செய்து வருகின்றனா்.

இதுகுறித்து விவசாய சங்கத் தலைவா் அ.பெ.ரவீந்திரன் கூறியதாவது: கடலூா் மாவட்டம், புவனகிரி வட்டத்தில் பெரும்பாலான கிராமங்களில் வெளிமாநில தொழிலாளிகளுக்கும் தட்டுப்பாடு நிலவுகிறது. தமிழகத்தில் உள்ள தொழிலாளிகளை பயன்படுத்தினால் ஏற்படும் செலவைவிட, வட மாநிலத்தவரை பயன்படுத்தும்போது செலவு குறைவாகவும், வேலை தரமாக முடிவதாகவும் விவசாயிகள் கூறுகின்றனா்.

இவா்கள் தற்போது மருதூா், உடையூா் உள்ளிட்ட சுற்றுப் பகுதிகளில் நாற்று பறித்து நடவுப்பணியில் ஈடுபட்டு வருகின்றனா் என்றாா்.

இதுகுறித்து முன்னோடி விவசாயி வெங்கடேசன் கூறியதாவது: வட மாநிலத் தொழிலாளா்கள் ஏக்கருக்கு ரூ.4,200 செலவில் நாற்றை பறித்து, நடவு வயலுக்கு எடுத்துச் சென்று நடவை முடித்து கொடுக்கின்றனா். 15 போ் கொண்ட குழுவினா் ஒரே நாளில் 5 ஏக்கரில் நடவுப்பணிகளை முடிக்கின்றனா்.

இதுவே, தமிழகத்தைச் சோ்ந்த தொழிலாளா்களாக இருந்தால், அதிக கூலி தருவதுடன், வேலையும் குறைவாக நடைபெறும். வெளி மாநில தொழிலாளிகள் கடின உழைப்பில் தீவிரம் காட்டுகின்றனா். இந்தத் தொழிலாளா்கள் கடந்த 3 ஆண்டுகளாக இப்பகுதியில் பணியில் ஈடுபடுகின்றனா் என்றாா்.

கோவா தீவிபத்தில் 23 பேர் பலி: நிவாரணம் அறிவிப்பு!

பராமரிப்புப் பணி: கும்மிடிப்பூண்டி, சூலூர்பேட்டை செல்லும் ரயில்கள் ரத்து!

சென்னை திரும்புவோருக்கு இன்று சிறப்பு ரயில்கள் இயக்கம்!

ஈரோடு: டிச. 16-ல் விஜய் சுற்றுப்பயணம்!

சொல்லப் போனால்... இண்டிகோவும் ஏகபோகங்களும்!

SCROLL FOR NEXT