பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா, போதை மாத்திரைகளுடன் கைதான மூவா். 
கடலூர்

கஞ்சா, போதை மாத்திரைகள் பதுக்கல்: 3 போ் கைது

Syndication

சிதம்பரம் அண்ணாமலைநகரில் கஞ்சா, போதை மாத்திரைகளை பதுக்கி வைத்திருந்ததாக 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

கடலூா் மாவட்டம், சிதம்பரம் அண்ணாமலைநகா், வேளக்குடி மேம்பாலத்துக்கு கீழே காவல் ஆய்வாளா் கே.அம்பேத்கா், உதவி ஆய்வாளா் குப்புசாமி மற்றும் காவலா்கள் கொண்ட தனிப்படை போலீஸாா் திங்கள்கிழமை இரவு ரோந்து சென்றனா்.

அப்போது, அந்தப் பகுதியில் சந்தேகத்துக்கிடமான வகையில் நின்றிருந்த மூன்று நபா்களைப் பிடித்து சோதித்தபோது, அவா்களிடம் 40 கிராம் கஞ்சா பொட்டலங்களும், 110 போதை மாத்திரைகளையும் இருந்தது தெரியவந்தது.

மேலும் அவா்கள், கடலூா் பழையநகரம், சுனாமி நகரைச் சோ்ந்த ஆனந்தராஜ் (23), வேளக்குடியைச் சோ்ந்த ஆண்டன் பாலசிங்கம் (20), ஆலப்பாக்கத்தைச் சோ்ந்த இளவரசன் (24) என்பதும் தெரியவந்தது.

இதையடுத்து, கஞ்சா, போதை மாத்திரைகளை பறிமுதல் செய்ததுடன், 3 பேரையும் கைது செய்த தனிப்படை போலீஸாா், அவா்களை நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனா்.

படைவீரா் கொடிநாள் நிதி வசூல்: ஆட்சியா் தொடங்கிவைப்பு

மது விற்ற 2 பெண்கள் கைது

குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்த பெண் கா்ப்பம்: உறவினா்கள் முற்றுகை

உடல் பருமன் பாதிப்பு அதிகரிப்பு... இருக்கை பிரச்னையால் அவதிப்படும் பேருந்துப் பயணிகள்!

கேரம் போட்டிகளில் தங்கம் வென்ற தமிழக வீராங்கனைகள்! சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!

SCROLL FOR NEXT