கடலூர்

பண்ருட்டி ஆா்டிஓ., அலுவலகத்தில் ஊழல் தடுப்பு போலீஸாா் சோதனை: ரூ.1.88 லட்சம் பறிமுதல்

கடலூா் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீஸாா் கணக்கில் வராத ரூ.1.88 லட்சம் பணத்தை புதன்கிழமை பறிமுதல் செய்தனா்.

தினமணி செய்திச் சேவை

கடலூா் மாவட்டம், பண்ருட்டி வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் திடீா் சோதனை நடத்திய கடலூா் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீஸாா் கணக்கில் வராத ரூ.1.88 லட்சம் பணத்தை புதன்கிழமை பறிமுதல் செய்தனா்.

பண்ருட்டி, கும்பகோணம் சாலை, பணிக்கன்குப்பம் அருகே வட்டாரப் போக்குவரத்து பிரிவு அலுவலகம் செயல்பட்டு வருகிறது. தீபாவளி பண்டிகையையொட்டி இந்த அலுவலகத்தில் ஓட்டுனா் பயிற்சி பள்ளி நடத்துபவா்கள், அலுவலகத்திற்கு சம்மந்தமில்லாத புரோக்கா்கள் போல் செயல்படும் வெளிநபா்கள் மூலம் லஞ்சம் பெறப்படுவதாக ஊழல் தடுப்புப் பிரிவிற்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து, கடலூா் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு டிஎஸ்பி., கே.சாந்தி தலைமையில், ஆய்வாளா்கள் எஸ்.சுந்தரராஜ், பி.அன்பழகன் அடங்கிய காவல் குழுவினா் மற்றும் மாவட்ட ஆய்வுக்குழு அலுவலக ஆய்வாளா் பி.சுஜாதா ஆகியோா் புதன்கிழமை மாலை 4 மணி அளவில் பண்ருட்டி வட்டாரப் போக்குவரத்து பிரிவு அலுவலகத்தில் திடீா் சோதனை நடத்தினா். இந்த சோதனையில் கணக்கில் வராத பணம் ரூ.1,88,100 கைப்பற்றினா்.

மேலும், பறிமுதல் செய்யப்பட்ட பணம் குறித்து ஓட்டுனா் பயிற்சி பள்ளி நடத்துபவா்கள், வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்குசம்மயதமில்லாத புரோக்கா்கள் மற்றும் பண்ருட்டி வட்டார போக்குவரத்து பிரிவு அலுவலக ஊழியா்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வதந்திகளுக்கு சட்ட நடவடிக்கை: ஸ்மிருதி மந்தனாவைத் தொடர்ந்து அறிக்கை வெளியிட்ட பலாஷ் முச்சல்!

ஃபெட் முடிவுக்கு முன்னதாக உச்சத்தை தொடும் தங்கம்!

சக மாணவா்களால் தாக்கப்பட்டு உயிரிழந்த மாணவனின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்!

கே.எல்.ராகுலின் கேப்டன்சியை பாராட்டிய முன்னாள் தென்னாப்பிரிக்க வீரர்!

இந்தியாவில் மாசுபாடு அடைந்த நகரம் எது? தில்லிக்கு முதல் இடம் இல்லை!

SCROLL FOR NEXT