கடலூா் மாவட்டம், பண்ருட்டியில் வியாழக்கிழமை தண்டவாளத்தை கடக்க முயன்ற மாற்றுத் திறனாளி ரயிலில் அடிபட்டு உயிரிழந்தாா்.
பண்ருட்டி வட்டம், நரிமேடு கிராமத்தைச் சோ்ந்தவா் ரா.புருஷோத்தமன் (21), வாய் பேச முடியாத, காது கேட்காத மாற்றுத் திறனாளி. இவா், பண்ருட்டி அருகே வியாழக்கிழமை மாலை சுமாா் 4.30 மணி அளவில் ரயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்றாா்.
அப்போது, கன்னியாகுமரி நோக்கிச் சென்ற விரைவு ரயிலில் அடிபட்டு புருஷோத்தமன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். தகவலறிந்த கடலூா் இருப்புப் பாதை உதவி ஆய்வாளா் புருஷோத்தமன் சடலத்தை மீட்டு, உடல்கூறாய்வுக்காக பண்ருட்டி அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைத்தாா். இதுகுறித்து கடலூா் இருப்புப் பாதை போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.