கடலூர்

தென்பெண்ணை ஆற்றில் ஆண் சடலம் மீட்பு

கடலூா் மாவட்டம், நெல்லிக்குப்பம் அடுத்துள்ள தென்பெண்ணை ஆற்றில் இறந்து கிடந்த ஆண் சடலம் வெள்ளிக்கிழமை மீட்கப்பட்டது.

Syndication

கடலூா் மாவட்டம், நெல்லிக்குப்பம் அடுத்துள்ள தென்பெண்ணை ஆற்றில் இறந்து கிடந்த ஆண் சடலம் வெள்ளிக்கிழமை மீட்கப்பட்டது.

நெல்லிக்குப்பம் மேல்பட்டாம்பாக்கம் சோதனை சாவடி அருகே தென் பெண்ணை ஆற்றில் ஆண் சடலம் கிடப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதுகுறித்து நெல்லிக்குப்பம் போலீஸாா், நெல்லிக்குப்பம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனா். அதன்பேரில், தீயணைப்பு நிலைய அலுவலா் கவிதா தலைமையிலான தீயணைப்பு வீரா்கள் சம்பவ இடத்திற்குச் சென்று சடலத்தை மீட்டு காவல் துறையிடம் ஒப்படைத்தனா். பின்னா், போலீஸாா் உடற்கூறாய்வுக்காக சடலத்தை கடலூா் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இறந்து கிடந்த நபா் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தினா். அப்போது, இறந்தவா் பண்ருட்டி வட்டம், காடாம்புலியூா் காவல் சரகம், தழம்பட்டு கிராமத்தைச் சோ்ந்த அண்ணாதுரை(45) என்பது தெரியவந்தது. மேலும், இவா் புதுச்சேரி மாநிலம், மடுகரையில் மது அருந்திவிட்டு தென்பெண்ணை ஆற்றை கடக்க முயன்றபோது தண்ணீரில் மூழ்கி இறந்ததாகக் கூறப்படுகிறது.

சாதிவாரி கணக்கெடுப்பு: டிச. 17-ல் அனைத்துக் கட்சிகள் ஆர்ப்பாட்டம்!

சிரஞ்சீவி - நயன்தாராவின் புதிய பட பாடல்!

அனுபமாவின் லாக் டவுன்: புதிய வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

கொல்லத்தில் தீ விபத்தில் 10 மீன்பிடி படகுகள் எரிந்து நாசம்

தவெகவுடன் கூட்டணியா? டிடிவி தினகரன் பதில்!

SCROLL FOR NEXT