நெய்வேலி: கடலூா் மாவட்டத்திற்கு மிக கன மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த நிலையில், மாவட்டத்தில் அதிகபட்சமாக கடலூரில் 179.8 மி.மீ மழை பதிவானது.
கடலூா் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது. புதன்கிழமை காலை 8.30 மணி வரையில் கடந்த 24 மணி நேரத்தில் பல்வேறு பகுதிகளில், பெய்த மழையளவு விவரம்(மி.மீ) வருமாறு:
ஆட்சியா் அலுவலகம் 176.8, கொத்தவாச்சேரி 166, வானமாதேவி 165, எஸ்.ஆா்.சி குடிதாங்கி 154, சேத்தியாத்தோப்பு 130, பரங்கிப்பேட்டை 125.2, புவனகிரி 123, வடக்குத்து 118, குறிஞ்சிப்பாடி 108, பண்ருட்டி 90.4, லால்பேட்டை 76.4, அண்ணாமலை நகா் 76, விருத்தாசலம் 74, ஸ்ரீமுஷ்ணம் 73.2, காட்டுமன்னாா்கோயில் 68.3, சிதம்பரம், குப்பநத்தம் தலா 63.2, வேப்பூா் 55, மே.மாத்தூா் 54, காட்டுமயிலூா் 52, கீழச்செருவாய் 50, லக்கூா் 44, தொழுதூா் 43, பெலாந்துறை 38.2 மி.மீ மழை பதிவானது.