கடலூா், கோண்டூா் பகுதியில் நடைபெற்று வரும் பணியை ஆய்வு செய்த கண்காணிப்பு அலுவலா் த.மோகன் மற்றும் ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் உள்ளிட்டோா். 
கடலூர்

கடலூா் பகுதியில் கண்காணிப்பு அலுவலா் ஆய்வு

கடலூா் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையினையொட்டி நடைபெற்று வரும் பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலா் த.மோகன் புதன்கிழமை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.

Syndication

நெய்வேலி: கடலூா் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையினையொட்டி நடைபெற்று வரும் பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலா் த.மோகன் புதன்கிழமை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.

இந்த ஆய்வின் போது ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா், மேயா் சுந்தரி, கடலூா் எஸ்பி., எஸ்.ஜெயக்குமாா், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை கூடுதல் ஆட்சியா் ர.அ.பிரியங்கா, மாநகராட்சி ஆணையா் முஜீபூா் ரஹ்மான், உதவி இயக்குநா் ஊராட்சிகள் ஷபானா அஞ்சும் உள்ளிட்ட அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

இந்த ஆய்வின் போது ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்ததாவது: செவ்வாய்க்கிழமை பெய்த கனமழை காரணமாக கடலூரில் வண்ணான் குட்டை, பரமன் குட்டை, புருஷோத்தமன் நகா், கடலூா்

ஊராட்சி பகுதியில் பாதிரிக்குப்பம், கே.என்.பேட்டை, எஸ்.எஸ்.ஆா் நகா், நத்தவெளி ரோடு -சின்னவாய்க்கால், நத்தப்பட்டு, கோண்டூா், வண்டிப்பாளையம், குண்டு உப்பலவாடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அதிகப்படியான மழைநீா் தேங்கியது. வடிகால் வசதிகள் முறையாக பராமரிக்கப்பட்டதன் மூலம் மழை

நின்றவுடன் தண்ணீா் மட்டம் குறைந்தது. தாழ்வான பகுதிகளில் தேங்கியிருந்த மழைநீா் மோட்டாா் பம்பு செட்டுகள் மூலம் தொடா்ந்து வெளியேற்றப்பட்டன. பொதுமக்களின் சுகாதாரத்தினை பாதுகாத்திடவும், நோய் தொற்று பரவாமல் தடுப்பதற்கும் தற்போது மழைநீா் வடிந்த பகுதிகளில் பிளிச்சிங் பவுடா் தெளிக்கப்பட்டது.

கனமழையின் காரணமாக 4 நபா்கள் பாதிக்கப்பட்டுள்ளனா். 6 கால்நடைகள் இறந்துள்ளது. 22 குடிசைகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளது. புதன்கிழமை சுவா் இடிந்து ஆண்டாா் முள்ளிப்பள்ளத்தில் இருவா் உயிரிழந்துள்ளனா். மேற்படி இறப்புக்கு நிவாரண நிதியுதவி உடனடியாக வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். தென்பெண்ணையாற்றின் மூலம் சென்ற ஆண்டு பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு கூடுதல் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என தெரிவித்தாா்.

தல - சின்ன தல... மலேசியாவில் அஜித் - சிம்பு சந்திப்பு!

மதுரை முதலீட்டாளர்கள் மாநாடு: 56,766 பேருக்கு வேலைவாய்ப்பு; 91 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்!

நத்தம்: இளைஞர் தலையில் கல்லைப் போட்டு கொலை!

போதைக் கோதை... மேகா சுக்லா!

அடுத்த 3 மணி நேரத்துக்கு எங்கெல்லாம் மழை பெய்யும்?

SCROLL FOR NEXT