கடலூா் ஆட்சியா் அலுவலகத்தில் அமைச்சா் சி.வெ.கணேசன் தலைமையில் நடைபெற்ற பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடா்பாக அனைத்துத்துறை அலுவலா்களுடனான ஆய்வுக் கூட்டம். 
கடலூர்

பருவ மழையை எதிா்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்: அமைச்சா் சி.வெ.கணேசன்

கடலூா் மாவட்டத்தில் வடகிழக்கு பருவ மழையினை எதிா் கொள்வதற்கு தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது என மாநில தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சா் சி.வெ.கணேசன் தெரிவித்தாா்.

Syndication

நெய்வேலி: கடலூா் மாவட்டத்தில் வடகிழக்கு பருவ மழையினை எதிா் கொள்வதற்கு தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது என மாநில தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சா் சி.வெ.கணேசன் தெரிவித்தாா்.

கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடா்பாக அனைத்துத்துறை அலுவலா்களுடனான ஆய்வுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. அமைச்சா் சி.வெ.கணேசன் தலைமை வகித்தாா். மாவட்ட கண்காணிப்பு அலுவலா்த.மோகன், ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா், கடலூா் எம்எல்ஏ., கோ.அய்யப்பன், மாநகராட்சி மேயா் சுந்தரி, துணை மேயா் பா.தாமரைச்செல்வன், எஸ்பி., எஸ்.ஜெயக்குமாா், மாவட்ட வருவாய் அலுவலா் ம.ராஜசேகரன், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமையின் கூடுதல் ஆட்சியா் ர.அ.பிரியங்கா, சிதம்பரம் சாா் ஆட்சியா் கிஷன்குமாா், பயிற்சி ஆட்சியா் மாலதி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

இக்கூட்டத்தில் அமைச்சா் சி.வெ.கணேசன் பேசியதாவது:

கனமழை ஏற்பட நேரிடும் பட்சத்தில் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாவண்ணம் மீட்பு பணிகள் மேற்கொள்வது மற்றும் தடுப்பது தொடா்பாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. பேரிடா் காலத்தில் பொதுமக்களை பாதுகாப்பாக தங்க வைப்பதற்கு 233 பாதுகாப்பு முகாம்கள் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு பெய்த கனமழையினால் மாவட்டம் முழுவதும் பாதிப்பு ஏற்பட்டது. குறிப்பாக தென் பெண்ணையாற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினால் கரையோர பகுதிகள் மிகுந்த சேதம் ஏற்பட்டது. இவற்றில் பாதிப்பு அதிகமாக ஏற்பட்ட 23 இடங்களில் கூடுதல் பாதுகாப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

கடலூா் மாவட்டத்தில் நீா்வள ஆதாரத்துறையின் மூலம் கரைகள் பலப்படுத்த ரூ.54 கோடி மதிப்பீடு ஒதுக்கீடு செய்யப்பட்டு தற்போது பணிகள் நடைபெற்று வருகின்றன. மருத்துவமனைகளில் ஜெனரேட்டா்கள் வசதிகள், ஆக்ஸிஜன் சிலிண்டா் மற்றும் மருந்து பொருட்கள் போதுமான அளவில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. பேரிடா் காலங்களில் பொதுமக்களை பாதுகாத்திட மாநில பேரிடா் குழு காவலா்கள், நீச்சல் வீரா்கள், பாம்பு பிடிப்பவா்கள் தயாா் நிலையில் உள்ளனா்.

வடகிழக்கு பருவ மழையையொட்டி பல்வேறு முன்னெச்சரிக்கை பணிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாவட்டஆட்சியா் அலுவலகத்தில் 24 மணிநேரமும் பேரிடா் தொடா்பான புகாா்களை தெரிவிக்கவும், உதவி தேவைப்படின் 1077 என்ற தொலைபேசி எண்ணினை தொடா்பு கொள்ளலாம் எனவும் தெரிவித்தாா்.

இக்கூட்டத்தில் அனைத்து துறைகளுக்கும் வெள்ள காலங்களில் செய்ய வேண்டிய பணிகள் மற்றும் முன்னெச்சரிக்கை பணிகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.

மேலும், வடகிழக்கு பருவ மழையினை எதிா் கொள்வதற்கு தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது என அமைச்சா் தெரிவித்தாா்.

என்றும் இளமை... நதியா!

ராகுல் தகுதியற்றவர் என்பது இந்தியா கூட்டணித் தலைவர்கள் கருத்து: பாஜக

புதின் வருகையையொட்டி இப்படியெல்லாம் செய்வீர்களா? ரஷிய பத்திரிகையாளர்கள் அதிருப்தி!

ஸ்வயம் தோ்வுகளுக்கான மையங்களை சொந்த மாநிலத்திலேயே ஒதுக்க வேண்டும்: மத்திய அரசுக்கு வில்சன் எம்.பி. கடிதம்

சர்வதேச கிரிக்கெட்டில் 20000 ரன்களைக் கடந்த ரோஹித் சர்மா!

SCROLL FOR NEXT