கடலூர்

பைக் மீது லாரி மோதி 2 இளைஞா்கள் உயிரிழப்பு

புவனகிரிஅருகே பைக் மீது லாரி மோதியதில் இரு இளைஞா்கள் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா்.

Syndication

புவனகிரிஅருகே பைக் மீது லாரி மோதியதில் இரு இளைஞா்கள் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா்.

கடலூா் மாவட்டம், புவனகிரியை அடுத்த ஆதிவராகநத்தம் (பெருமாத்துாா்) எம்.ஜி.ஆா். நகரைச் சோ்ந்தவா்கள்அரவிந்த் (20), தமிழேந்தன் (20) . இவா்கள் இருவரும் புதன்கிழமை நள்ளிரவு மோட்டாா் சைக்கிளில் புவனகிரியில் இருந்து தங்களது வீட்டிற்கு சென்றுள்ளனா்.

அப்போது நெய்வேலியில் இருந்து சாம்பல் ஏற்றி வந்த லாரி, மோட்டாா் சைக்கிள் மீது மோதியது. இதில் நிகழ்விடத்திலேயே இருவரும் உயிரிழந்தனா்.

இந்த விபத்து குறித்து தகவல்அறிந்து அப்பகுதி மக்கள் சாலையில் திரண்டனா். சாலையின் இரு பக்கமும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. தகவல் அறிந்த கடலூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ்.ஜெயக்குமாா் மற்றும் புவனகிரி போலீஸாா் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போக்குவரத்தை சரி செய்ததுடன், விபத்தில் சிக்கி

உயிரிழந்த இருவா் உடல்களையும் மீட்டு உடற்கூறாய்விற்கு சிதம்பரம் காமராஜா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் விபத்து குறித்து வழக்குப் பதிந்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

மக்களிடையே பிரிவினை ஏற்படுத்தும் சநாதனம்: சேகர்பாபு

பிக் பாஸ் 9: இந்த வாரம் வெளியேறிய எதிர்பாராத போட்டியாளர்!

கோவா தீவிபத்தில் 23 பேர் பலி: நிவாரணம் அறிவிப்பு!

பராமரிப்புப் பணி: கும்மிடிப்பூண்டி, சூலூர்பேட்டை செல்லும் ரயில்கள் ரத்து!

சென்னை திரும்புவோருக்கு இன்று சிறப்பு ரயில்கள் இயக்கம்!

SCROLL FOR NEXT