மணிமுக்தா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் கரையோர மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
கடலூா் மாவட்டம் விருத்தாசலம் வடிநில உபகோட்டத்தில் உள்ள மணிமுக்தாற்றின் நீா்பிடிப்பு பகுதியில் பெய்து பருவ மழையின் காரணமாக தற்போது மேமாத்தூா் அணைகட்டிற்கு வினாடிக்கு 1536 கன அடி வீதம் நீா் வரத்து உள்ளது.
நீா் பிடிப்பு பகுதியில் பெய்து வரும் மழையின் அளவினை பொறுத்து நீா் வரத்து மேலும்அதிகரிக்கும் பட்சத்தில் வெள்ள அபாய முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்வதற்காக வேப்பூா் வருவாய் வட்டாட்சியா், விருத்தாசலம் வருவாய் வட்டாட்சியா்களுக்கு மாவட்ட நிா்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
மேலும் ஆற்றின் கரையோரம் உள்ள கிராம மக்களுக்கு மணிமுக்தா ஆற்றில் இறங்கவோ, ஆற்றைக் கடக்கவோ வேண்டாம் என வெள்ளாறு வடிநில உபகோட்ட உதவி செயற்பொறியாளா் அறிவுறுத்தியுள்ளாா்.