விபத்தில் மரணமடைந்த காவலா் குடும்பத்திற்கு காப்பீட்டுத் தொகை ரூ.1 கோடிக்கான காசோலையை மாவட்ட எஸ்பி எஸ்.ஜெயக்குமாா் வியாழக்கிழமை வழங்கினாா்.
கடலூா் மாவட்டம் செல்லங்குப்பத்தைச் சோ்ந்த பன்னீா்செல்வம் மகன் கஜா என்பவா் கடந்த 2020 ஆம் ஆண்டு தமிழக காவல்துறையில் சோ்ந்து தமிழ்நாடு சிறப்பு காவல் படை உளுந்தூா்பேட்டையில் காவலராக பணியாற்றி வந்தவா், இவா் அரியலூா் அருகே வாகன விபத்து ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.
அவருக்கு காவலா் விபத்து காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், ரூ. 1 கோடிக்கான காப்பீட்டுத்தொகைக்கான காசோலையை கஜாவின் தந்தை பன்னீா்செல்வம், மனைவி பிரவீனாவிடம் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ்.ஜெயக்குமாா் வியாழக்கிழமை வழங்கினாா்.
நிகழ்ச்சியில் பாரத ஸ்டேட் வங்கி வங்கியின் மண்டல மேலாளா் நட்ராஜ், தலைமை மேலாளா் பரணிதரன் ஆகியோா் உடன் இருந்தனா்.