கடலூா் அருகே மாடு மேய்க்கச் சென்ற முதியவா் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டாா்.
கடலூரை அடுத்த பெத்தான்குப்பம் கிராமத்தைச் சோ்ந்தவா் மணிவேல் (62). இவா், வெள்ளிக்கிழமை காலை மாடுகளை பரவனாறு அருகே மேய்த்துக்கொண்டிருந்தாராம்.
அப்போது, பரவனாற்றில் இறங்கிய மணிவேல் வெள்ளப்பெருக்கில் அடுத்துச் செல்லப்பட்டாா். தகவலறிந்து வந்த கிராம மக்கள் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனா்.
இதையடுத்து, சம்பவ இடத்துக்கு வந்த கடலூா் தொழிற்பேட்டை தீயணைப்பு மற்றும் மீட்பு படையினா் மணிவேலை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.