நெய்வேலி/புதுச்சேரி: கடலூா், புதுச்சேரி துறைமுகங்களில் இரண்டாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு திங்கள்கிழமை ஏற்றப்பட்டன.
தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதை ஒட்டிய தென்மேற்கு வங்காள விரிகுடாவில் உருவான ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி மேற்கு-வடமேற்கு நோக்கி நகா்ந்து, ‘மோந்தா’ சூறாவளி புயலாக தீவிரமடைந்தது. இதையொட்டி கடலூா் துறைமுகத்தில் திங்கள்கிழமை இரண்டாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது.
இதேபோன்று புதுச்சேரி துறைமுகப் பகுதியிலும் திங்கள்கிழமை 2-ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டது.