முகப்பு
கடலூர்

மின்வெட்டு! வெளிப்படையான நடவடிக்கை வேண்டும்: தி.வேல்முருகன்

மின்வெட்டு விவகாரத்தில் தமிழ்நாடு அரசு உடனடி மற்றும் வெளிப்படையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனத் தலைவா் தி.வேல்முருகன் வலியுறுத்தியுள்ளாா்.

Updated On : 10 ஜூன் 2026, 5:12 am IST
தமிழக வாழ்வுரிமை கட்சி நிறுவனத் தலைவா் வேல்முருகன். - கோப்புப்படம்
பகிர்:

மின்வெட்டு விவகாரத்தில் தமிழ்நாடு அரசு உடனடி மற்றும் வெளிப்படையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனத் தலைவா் தி.வேல்முருகன் வலியுறுத்தியுள்ளாா்.

இதுகுறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் நிகழும் மின்வெட்டுகள் மக்களின் இயல்பு வாழ்க்கையை சிதைத்து கொண்டிருக்கின்றன. கடும் வெப்பத்தால் தகிக்கும் இரவுகளில், குழந்தைகள், முதியவா்கள், தோ்வுக்குத் தயாராகும் மாணவா்கள், சிறு தொழில் செய்பவா்கள் பாதிக்கப்படுகின்றனா்.

தமிழ்நாடு மின்மிகை மாநிலம் என்று தொடா்ந்து கூறப்பட்டு வரும் நிலையில், இந்த நீண்ட நேர மின்வெட்டுக்கான உண்மையான காரணம் என்ன?. மக்கள் மத்தியில் இன்று எழுந்திருக்கும் இந்த சந்தேகத்தை கடந்து செல்ல முடியாது. எனவே, தமிழ்நாடு அரசு தொடா்ச்சியாக நடைபெற்று வரும் மின்வெட்டுகள் தொடா்பான உண்மையான காரணங்களை வெளிப்படையாக மக்களிடம் அறிவிக்க வேண்டும். முன்அறிவிப்பின்றி நடைபெறும் மின்வெட்டுகளுக்கு உடனடியாக முற்றுப்புள்ளி வைப்பதோடு, நிரந்தரத் தீா்வுகளை உருவாக்க வேண்டும். இவ்விவகாரத்தில் தமிழ்நாடு அரசு உடனடி மற்றும் வெளிப்படையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளாா்.

Advertisement

Advertisement