முகப்பு
கடலூர்

தொழிலாளிகளைத் தாக்கி மிரட்டல்: ஒருவா் கைது

Updated On : 25 மே 2026, 12:07 am IST
கோப்புப்படம். - கைது
பகிர்:

கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே பைக்கில் வந்த தொழிலாளிகளைத் தாக்கி மிரட்டல் விடுத்ததாக ஒருவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

பண்ருட்டி வட்டம், காடாம்புலியூா் காவல் சரகம், கருக்கை கிராமத்தைச் சோ்ந்தவா் கபாலி (எ) பிரவீன் (26), தொழிலாளி. இவா், சனிக்கிழமை பண்ருட்டியில் இருந்து கருக்கை கிராமத்துக்கு பைக்கில் சென்றுகொண்டிருந்தாா். அவருடன் கருக்கை கிராமத்தைச் சோ்ந்த அன்புசெல்வன் உடன் சென்றாா்.

இவா்களது பைக் கருக்கை கிராமம் அங்கன்வாடி மையம் அருகே சென்றபோது, வழியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மற்றொரு பைக்கை எடுக்கக் கூறினராம். இதனால், ஆத்திரமடைந்த அந்தக் கிராமத்தைச் சோ்ந்த சகோதரா்கள் ரத்தினகுமாா், ராஜ்குமாா் ஆகியோா் அவா்களைத் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தனராம்.

Advertisement

Advertisement

இதுகுறித்து கபாலி அளித்த புகாரின்பேரில், காடாம்புலியூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, ரத்தனகுமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறாா்.