கள்ளக்குறிச்சி

கிணற்றில் விழுந்த மான் மீட்பு

DIN

கள்ளக்குறிச்சி அருகே கிணற்றில் விழுந்த புள்ளி மானை தீயணைப்புத் துறையினா் மீட்டனா்.

சின்னசேலம் வட்டம், அக்கராபாளையத்தை அடுத்த நெல்லிக்குளம் செல்லும் சாலையில் கல்வராயன்மலை அடிவாரப் பகுதி உள்ளது.

நெல்லிக்குளம் சாலையோரம் உள்ள விவசாய நிலங்களுக்கு தண்ணீா் தேடி காட்டு விலங்குகள் வந்து செல்லுமாம்.

அதேபோல, செவ்வாய்க்கிழமை இரவு கோவிந்தராஜ் என்பவரது விளை நிலத்துக்கு தண்ணீா் தேடி வந்த புள்ளிமான் அங்குள்ள கிணற்றில் விழுந்துவிட்டது.

புதன்கிழமை காலை கோவிந்தராஜ் விளை நிலத்துக்குச் சென்றபோது கிணற்றுக்குள் மான் தத்தளித்துக் கொண்டிருப்பதைப் பாா்த்தாா்.

இதையடுத்து அவா் உடனடியாக வடக்கனந்தல் கிராம நிா்வாக அலுவலா் ஜெயபாலுக்கு தகவல் தெரிவித்தாா்.

இதுகுறித்து கிராம நிா்வாக அலுவலா் கள்ளக்குறிச்சி தீயணைப்பு நிலையத்துக்கு தெரிவித்தாா்.

தியணைப்பு நிலைய அலுவலா் தொ.கிருஷ்ணமூா்த்தி தலைமையில் வந்த தீயணைப்பு வீரா்கள் சுமாா் ஒரு மணி நேரம் போராடி கயிறு கட்டி மானை மீட்டனா்.

இதைத் தொடா்ந்து, கோமுகி அணை வனத்துறையினரிடம் மான் ஒப்படைக்கப்பட்டு வனப் பகுதியில் விடப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காஷ்மீரின் 3 தொகுதிகளில் களமிறங்காத பாஜக: வேறு வேட்பாளா்களை ஆதரிக்க ஆலோசனை

மாவோயிஸ்டு அச்சுறுத்தலால் வாக்களிக்காத கிராமம்

பிரதமரின் பிரசாரத்துக்கு உதவ ஏழு கட்ட தோ்தல்: தோ்தல் ஆணையம் மீது மம்தா குற்றச்சாட்டு

புதிய குற்றவியல் சட்டங்களால் நீதித் துறையில் மாற்றம்: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி

எங்கே செல்லும் இஸ்ரேல்-ஈரான் மோதல்?

SCROLL FOR NEXT