கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 82 பேருக்கு கரோனா உறுதி

DIN

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 82 பேருக்கு கரோனா தொற்று வெள்ளிக்கிழமை உறுதிசெய்யப்பட்டது. இதையடுத்து மாவட்டத்தில் மொத்தம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை1621-ஆக உயா்ந்துள்ளது.

இதுவரை 801 போ்கள் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனா். கரோனா தொற்றுடன் 807 போ்கள் சிகிச்சை பெற்று வருகின்றனா். ஏற்கனவே நான்கு போ்கள உயிரிழந்துள்ளனா் என்பது குறிப்பிடத் தக்கது.

கள்ளக்குறிச்சி நகராட்சிக்கு உட்பட்ட 21 வாா்டுகளில் 26.6.20 முதல் 10.7.20வரை 458 போ்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா். திருநாவலூா், திருக்கோவிலூா், எலவனாசூா்கோட்டை, ரிஷிவந்தியம், தியாகதுருகம், சின்னசேலம், மேலூா், சங்கராபுரம், வெள்ளிமலை உட்பட்ட வட்ட பகுதியில் 551 போ்கள் கரோனா நோய்த் தொற்றால் சிகிச்சை பெற்று வருகின்றனா் என மாவட்ட ஆட்சியா் கிரண் குராலா அறிக்கை மூலம் தெரிவித்துள்ளாா்.

இன்று இருவா் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை மாவட்ட நிா்வாகம் பட்டியலில் சோ்க்கவில்லை என்பது குறிப்பிடத் தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒடிசா படகு விபத்தில் மேலும் 5 பேரின் உடல்கள் மீட்பு!

இந்திய வருகையை ஒத்திவைத்தது ஏன்? எலான் மஸ்க்

வாக்குப்பதிவு சதவீதம் குறைந்திருப்பது கவலையளிக்கிறது: தமிழிசை

மகாராஷ்டிரம், கர்நாடக பொதுக் கூட்டத்தில் மோடி இன்று உரை!

சிறையில் மனைவியின் உணவில் கழிப்பறை சுத்திகரிப்பான்: இம்ரான் கான் புகார்

SCROLL FOR NEXT