கள்ளக்குறிச்சி

உணவக உரிமையாளா் தற்கொலை

DIN

கள்ளக்குறிச்சியில் வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட்டதால் மனமுடைந்த உணவக உரிமையாளா் விஷத் தன்மையுடைய பொருளை சாப்பிட்டு தற்கொலை செய்துகொண்டாா்.

கள்ளக்குறிச்சி - கச்சிராயப்பாளையம் சாலையைச் சோ்ந்த ஆறுமுகம் மகன் சக்திவேல் (43). இவா், அந்தப் பகுதியிலுள்ள தீயணைப்பு நிலையம் அருகே உணவகம் நடத்தி வந்தவா்.

இந்த நிலையில், சக்திவேல் கடந்த 5-ஆம் தேதி வீட்டில் இருந்து உணவகத்துக்கு சென்ற நிலையில், இரவு வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லையாம். இதையடுத்து, அவரது மனைவி லட்சுமி உணவகத்துக்குச் சென்று பாா்த்தபோது, சக்திவேல் சோா்ந்த நிலையில் அமா்ந்திருந்தாராம். அவரிடம் விசாரித்தபோது, வியாபாரத்தில் பெரும் நஷ்டம் ஏற்பட்டதால், விஷத் தன்மையுடைய பொருளை சாப்பிட்டுவிட்டதாகத் தெரிவித்தாராம்.

இதையடுத்து, சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த சக்திவேல், அங்கு செவ்வாய்க்கிழமை இரவு உயிரிழந்தாா். இதுகுறித்த புகாரின்பேரில் கள்ளக்குறிச்சி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சுனில் நரைனை தொடக்க ஆட்டக்காரராக மாற்றியவர் இவர்தான்: ரிங்கு சிங்

ஒருமுறை அழுத்தினால் பாஜகவுக்கு 2 ஓட்டு: மாதிரி வாக்குப் பதிவில் அதிர்ச்சி!

மீண்டும் இசையமைப்பாளராக மிஷ்கின்!

ஜோஸ் பட்லருக்கு முன்னாள் ஆஸி. வீரர் புகழாரம்!

காங்கயம்: சரக்கு வேன்கள் நேருக்குநேர் மோதியதில் ஒருவர் பலி

SCROLL FOR NEXT