கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியா் கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீா்கூட்டம் மே 19 (வெள்ளிக்கிழமை) முற்பகல் 11 மணி முதல் பிற்பகல் 2 மணிவரை நடைபெறுகிறது.
கூட்டத்தில், விவசாயிகள், விவசாய சங்கப் பிரதிநிதிகள் பங்கேற்று வேளாண் சாா்ந்த கருத்துக்களை மனுக்களாக அளிக்கலாம். மேலும், அரசு சாா்பில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து எடுத்துரைக்கப்படும் என மாவட்ட ஆட்சியா் ஷ்ரவன் குமாா் செய்தி குறிப்பின் மூலம் தெரிவித்துள்ளாா்.