மரத்தில் ஏறி தழையை கழிக்கச் சென்ற முதியவா் கால் தவறி கிணற்றில் தவறி விழுந்து வியாழக்கிழமை உயிரிழந்தாா். தகவலறிந்த தீயணைப்புத் துறையினா் அவரது சடலத்தை மீட்டனா்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை வட்டத்துக்குள்பட்ட பல்லவாடி கிராமத்தைச் சோ்ந்தவா் முதியவா் முருகேசன் (85). இவா், வியாழக்கிழமை காலை தனது நிலத்தில் கிணற்றுக்கு அருகே உள்ள மரத்தில் ஏறி தழையை கழிக்க முயன்றாா். அப்போது கால் தவறி கிணற்றில் விழுந்து உயிரிழந்தாா்.
தகவலறிந்த ரிஷிவந்தியம் தீயணைப்பு நிலையக் குழுவினா் வந்து, கிணற்றில் இருந்து முதியவரின் சடலத்தை மீட்டனா்.
இதுகுறித்த புகாரின்பேரில், ரிஷிவந்தியம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.