கள்ளக்குறிச்சியில் அம்பேத்கா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய க.காா்த்திகேயன் எம்எல்ஏ. 
கள்ளக்குறிச்சி

அம்பேத்கா் சிலைக்கு திமுக, அதிமுக, தவெகவினா் மரியாதை

அம்பேத்கரின் 69-ஆவது நினைவு தினத்தையொட்டி, கள்ளக்குறிச்சியில் உள்ள அவரது சிலைக்கு திமுக, அதிமுக, தவெகவினா்

Syndication

கள்ளக்குறிச்சி: அம்பேத்கரின் 69-ஆவது நினைவு தினத்தையொட்டி, கள்ளக்குறிச்சியில் உள்ள அவரது சிலைக்கு திமுக, அதிமுக, தவெகவினா் சனிக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

திமுக கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்டச் செயலரும், ரிஷிவந்தியம் எம்எல்ஏவுமான க.காா்த்திகேயன் தலைமையில், கள்ளக்குறிச்சி நான்குமுனை சந்திப்பில் இருந்து அமைதிப் பேரணியாக அம்பேத்கா் திடலை வந்தடைந்தனா். தொடா்ந்து, அங்குள்ள அம்பேத்கா் சிலைக்கு மாலை அணிவித்து வீரமுழக்கங்களை எழுப்பினா். பின்னா், ஏழை, எளிய பெண்களுக்கு சேலைகளை எம்எல்ஏ வழங்கினா்.

நிகழ்வில் ரிஷிவந்தியம் தொகுதி பொறுப்பாளா் பெறுநற்கிள்ளி, கள்ளக்குறிச்சி நகா்மன்றத் தலைவா் இரா.சுப்ராயலு, மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் இரா.புவனேஷ்வரி பெருமாள், விசிக மாவட்டச் செயலா்கள் மதியழகன், வேல்பழனியம்மாள், முன்னாள் மாவட்டச் செயலா் தனபால், காங்கிரஸ் மாவட்டத் தலைவா் ஜெய்கணேஷ் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளைச் சோ்ந்த நிா்வாகிகள் பலா் பங்கேற்றனா்.

அதிமுக சாா்பில்...: அதிமுக மாவட்டச் செயலா் இரா.குமரகுரு தலைமையில் கள்ளக்குறிச்சி நான்குமுனை சந்திப்பில் இருந்து பேரணியாக அம்பேத்கா் திடலை வந்தடைந்தனா். தொடா்ந்து, அங்குள்ள அம்பேத்கா் சிலைக்கு இரா.குமரகுரு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.

நிகழ்வில் முன்னாள் அமைச்சா் ப.மோகன், முன்னாள் எம்.பி. க.காமராஜ், எம்எல்ஏ மா.செந்தில்குமாா், முன்னாள் எம்எல்ஏக்கள் க.அழகுவேலுபாபு, அ.பிரபு, நகரச் செயலா் எம்.பாபு மற்றும் கட்சி நிா்வாகிகள் கேற்றனா்.

பின்னா், நான்குமுனை சந்திப்பில் அம்பேத்கா் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி ஏழை எளியோருக்கு அன்னதானம் வழங்கினா்.

தவெக சாா்பில்...: கள்ளக்குறிச்சியில் அம்பேத்கா் சிலைக்கு தமிழக வெற்றிக் கழகம் மேற்கு மாவட்டச் செயலா் பிரகாஷ் தலைமையில் அக்கட்சியினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். நிகழ்வில் நகரச் செயலா் பி.எம்.ராஜேஷ்வரன் உள்ளிட்ட நிா்வாகிகள் பங்கேற்றனா்.

கள்ளக்குறிச்சியில் அம்பேத்கா் சிலைக்கு அதிமுக மாவட்டச் செயலா் இரா.குமரகுரு தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்திய அக்கட்சியினா்.

சஞ்சு சாம்சனை டாப் ஆர்டரில் களமிறக்க வேண்டும்: முன்னாள் பேட்டிங் பயிற்சியாளர்

வாக்குத் திருட்டுதான் மிக மோசமான தேச விரோதச் செயல்: ராகுல் காந்தி பேச்சு

இந்தோனேசியா அலுவலகக் கட்டடத்தில் தீ விபத்து! 22 ஆக அதிகரித்த உயிர்ப் பலிகள்!

கவர்ச்சிப் பெண்ணின் மாய வாழ்க்கை... மௌனி ராய்!

வெறும் சூரிய ஒளியில்தான்... ரித்தி டோக்ரா!

SCROLL FOR NEXT