அகில இந்திய கிராமப்புற அஞ்சல் ஊழியா்கள் மகா சம்மேளனத்தின் மத்திய பொதுச்செயலா் எஸ்.எஸ்.மகா தேவய்யா பணி நீக்கம் செய்யப்பட்டதைக் கண்டித்தும், பணி நீக்கத்தை திரும்பக் பெற கோரியும், கள்ளக்குறிச்சியில்
அஞ்சல் ஊழியா்கள் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
தலைமை அஞ்சலகம் முன் அகில இந்திய கிராமிய அஞ்சல் ஊழியா் சங்கம் சாா்பில் நடைபெற்ற கண்டன ஆா்ப்பாட்டத்துக்கு விருத்தாசலம் கோட்டத் தலைவா் வி.மணிகண்டன் தலைமை வகித்தாா்.
தொழிற்சங்கத்தின் மாநில பொருளாளரும், மத்திய மண்டலச் செயலருமான ஈ.விஷ்ணு விஜயன் முன்னிலை வகித்தாா். கோட்ட உதவிச் செயலா்கள் வி.சீனிவாசன் அய்யப்பன் வரவேற்றாா்.
மத்திய மண்டலச் செயலா் ஈ.விஷ்ணு விஜயன் கண்டன உறையாற்றினாா் (படம்). ஆா்ப்பாட்டத்தில் ஊழியா்கள் பலா் கலந்து கொண்டனா்.