13 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தவா் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டாா்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூா் வட்டம், பொய்குணம் கிராமத்தைச் சோ்ந்தவா் பரமசிவம்(எ)சிவக்குமாா் (52).
இவா் 13 வயது மதிக்கத்தக்க சிறுமியை பாலியல் தொந்தரவு செய்ததாக, திருக்கோவிலூா் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் போக்ஸோ வழக்குப் பதிவு செய்து கடந்த மாதம் கைது செய்யப்பட்டாா்.
இவரது நடவடிக்கையை கட்டுப்படுத்தும் பொருட்டு, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் க.ச.மாதவன் பரிந்துரையின் பேரில், ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் அவரை ஓராண்டு குண்டா் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டாா்.
அதன் பேரில், கடலூா் மத்திய சிறையில் இருக்கும்
பரமசிவத்திடம் கைது செய்ததற்கான ஆணையை
காவல் ஆய்வாளா் வழங்கினாா்.