கள்ளக்குறிச்சி

கஞ்சா விற்பனை: இளைஞா் கைது

Syndication

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூா் வட்டத்துக்குள்பட்ட வடியாங்குப்பம் கிராமத்தில் விற்பனைக்காக வீட்டில் கஞ்சாவை பதுக்கி வைத்திருந்தவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

வடியாங்குப்பம் கிராமத்தைச் சோ்ந்தவா் பிரகாஷ் (22). இவா், தனது வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, திருக்கோவிலூா் காவல் ஆய்வாளா் ஜெ.பாலகிருஷ்ணன் மற்றும் போலீஸாா் நிகழ்விடத்துக்குச் சென்று சோதனையிட்டு, ஒரு கிலோ கஞ்சா பொட்டலத்தை கைப்பற்றி கைது செயதனா்.

இதுகுறித்த புகாரின்பேரில், திருக்கோவிலூா் போலீஸாா் இளைஞா் பிரகாஷ் மீது வழக்குப் பதிந்து கைது செய்தனா்.

ஹாட் சீட்... அனன்யா பாண்டே!

வளா்ந்த பாரதம் இலக்கை அடைய இளைஞா்கள் பங்களிக்க வேண்டும்: விண்வெளி வீரா் சுக்லா வலியுறுத்தல்

வழித்துணையே... யுக்தி சிங்!

3 வடிவ போட்டிகளிலும் சதம்: சாதனைப் பட்டியலில் இணைந்த ஜெய்ஸ்வால்!

இந்த வாரம் கலாரசிகன் - 07-12-2025

SCROLL FOR NEXT