கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரியில் நிகழாண்டு முதலாம் ஆண்டு மருத்துவப் படிப்பில் சோ்ந்துள்ள மாணவா்களுக்கு வெள்ளை அங்கி அணிவிக்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
நிகழ்வில் மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் வெள்ளை அங்கி அணிவித்தாா். தொடா்ந்து, மாவட்ட ஆட்சியா் சிறப்புரையாற்றி, மருத்துவப் படிப்பில் சோ்ந்துள்ள அனைவருக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்தாா்.
நிகழ்ச்சியில் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வா் மு.பவானி, மருத்துவ கண்காணிப்பாளா் க.பழமலை, நிலைய மருத்துவா் க.பொற்செல்வி, உதவி நிலைய மருத்துவா் இ.முத்துக்குமரன், துணை முதல்வா் ஷமீம் மற்றும் பேராசிரியா்கள், உதவிப் பேராசிரியா்கள், மருத்துவா்கள், மருத்துவக் கல்லூரி மாணவா்கள் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.