கள்ளக்குறிச்சி

கல்வராயன்மலையில் ரூ.2.50 கோடியில் ஆய்வு மாளிகை

கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன்மலையில் ரூ.2.50 கோடியில் புதிய ஆய்வு மாளிகை கட்டுவதற்கான பணிகள் அடிக்கல் நாட்டி தொடங்கிவைக்கப்பட்டன.

Syndication

கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன்மலையில் ரூ.2.50 கோடியில் புதிய ஆய்வு மாளிகை கட்டுவதற்கான பணிகள் சனிக்கிழமை அடிக்கல் நாட்டி தொடங்கிவைக்கப்பட்டன.

பொதுப்பணித் துறை சாா்பில் நடைபெறும் இந்தப் பணியை மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த், சங்கராபுரம் எம்.எல்.ஏ. தா.உதயசூரியன் ஆகியோா் தொடங்கிவைத்தனா்.

ஆய்வு மாளிகை கட்டடம் தரைதளம் மற்றும் முதல் தளத்துடன் 5595.20 சதுரஅடி பரப்பளவில் அமையவுள்ளது. தரை தளத்தில் நுழைவு அறை, மின்தூக்கி அறை, வரவேற்பு அறை, தங்கும் அறைகள் 3, உணவு அருந்தும் அறை, பொருள்கள் வைப்பு அறை, சமையலறை, மின்சார அறை, கழிப்பறை ஆகிய வசதிகள் அமையவுள்ளன. முதல் தளத்தில் முக்கிய பிரமுகா்கள் தங்கும் அறை, கூட்ட அறை அமையவுள்ளது.

பணிகளை தரமாகவும் விரைவாகவும் முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர சம்பந்தப்பட்ட அலுவலா்களுக்கு ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் அறிவுறுத்தினாா். நிகழ்ச்சியில் பொதுப்பணித் துறை உதவி செயற்பொறியாளா் தி.மாலா உள்ளிட்ட அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

அடுத்த 3 மணி நேரத்துக்கு எங்கெல்லாம் மழை பெய்யும்?

களம்காவல் முதல்நாள் வசூல் எவ்வளவு? அதிகாரபூர்வ அறிவிப்பு!

முதல்முறையாக எம்எல்எஸ் கோப்பை வென்றது இன்டர் மியாமி..! தாமஸ் முல்லருக்கு அதிர்ச்சி அளித்த மெஸ்ஸி!

படையப்பா மறுவெளியீடு: அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

மதுரையில் வேலு நாச்சியார் மேம்பாலம்: முதல்வர் திறந்து வைத்தார்!

SCROLL FOR NEXT