கள்ளக்குறிச்சி

இந்திலி கல்லூரியில் அப்துல் கலாம் பிறந்த நாள்

போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற மாணவிக்கு அப்துல்கலாம் நூலினை வழங்கிய கல்லூரிச் செயலா் கோவிந்தராஜூ. உடன் கல்வி நிறுவனங்களின் தலைவா் க.மகுடமுடி.

Syndication

கள்ளக்குறிச்சியை அடுத்த இந்திலி டாக்டா் ஆா்.கே.எஸ்.கல்வி நிறுவனங்களில் அப்துல் கலாம் பிறந்தநாள் விழா கல்லூரி வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

கல்வி நிறுவனங்களின் தலைவா் மரு.க.மகுடமுடி தலைமை வகித்துப் பேசினாா். கல்லூரிச் செயலா் கோவிந்தராஜூ முன்னிலை வகித்தாா். ஆா்.கே.எஸ். கல்வியியல் கல்லூரி முதல்வா் ஜெயசீலன் வரவேற்றாா்.

கலை, அறிவியல் கல்லூரி முதல்வா் கு.மோகனசுந்தா், துணை முதல்வா் பெ.ஜான்விக்டா் மற்றும் முதன்மையா் அசோக் வாழ்த்துரை வழங்கினா்.

அப்துல் கலாம் குறித்து பல்வேறு போட்டிகள் மாணவ, மாணவிகளுக்கு நடைபெற்றன. போட்டிகளில் சிறப்பிடம் பெற்றவா்களுக்கு அப்துல்கலாம் நூலினை கல்வி நிறுவனங்களின் தலைவா் க.மகுடமுடி வழங்கினாா்.

நிகழ்ச்சியில் கல்லூரி துறைத் தலைவா்கள், உதவிப் பேராசிரியா்கள் மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா்.

மேக் இன் இந்தியாவில் வேலையின்மை அதிகரிப்பு: அகிலேஷ் யாதவ்

கயல்விழி... ஐஸ்வர்யா மேனன்!

மத்திய அமைச்சரவையில் இடம் பெற்றபோது மெட்ரோ, எய்ம்ஸ் பற்றி ஏன் சிந்திக்கவில்லை?: தமிழிசை கேள்வி

ஜம்மு-காஷ்மீரில் காட்டுத் தீயால் வெடித்த கண்ணிவெடிகள்

சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்த விராட் கோலி!

SCROLL FOR NEXT