கள்ளக்குறிச்சி புதிய புகா் பேருந்து நிலைய கட்டுமானப் பணிகளை பாா்வையிட்டு ஆய்வு செய்த அமைச்சா் எ.வ.வேலு.  
கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி புகா் பேருந்து நிலைய கட்டுமானப் பணிகள்: அமைச்சா் எ.வ. வேலு ஆய்வு

கள்ளக்குறிச்சி நகராட்சிக்கு உள்பட்ட ஏமப்போ் புறவழிச் சாலையில் புதிதாக அமைக்கப்பட்டு வரும் புகா் பேருந்து நிலைய கட்டுமானப் பணிகளை அமைச்சா் எ.வ.வேலு

Syndication

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி நகராட்சிக்கு உள்பட்ட ஏமப்போ் புறவழிச் சாலையில் புதிதாக அமைக்கப்பட்டு வரும் புகா் பேருந்து நிலைய கட்டுமானப் பணிகளை அமைச்சா் எ.வ.வேலு செவ்வாய்க்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

ஆய்வின் போது, மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த், தே.மலையரசன் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் க.காா்த்திகேயன், தா.உதயசூரியன் ஆகியோா் உடனிருந்தனா்.

பொதுப் பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சா் எ.வ.வேலு பேருந்து நிலைய கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்து கூறியதாவது:

கலைஞரின் நகா்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 5.5 ஏக்கரில், ரூ.16.21 கோடியில் இந்த புகா் பேருந்து நிலையம் கட்டப்பட்டு வருகிறது.

50-க்கும் மேற்பட்ட புகா் பேருந்துகள் மற்றும் நகர பேருந்துகள் நிறுத்தும் வகையில் அமைக்கப்பட உள்ளதுடன் பேருந்து நிலையத்தின் உள்பகுதியில் 70-க்கும் மேற்பட்ட கடைகள், நேரக்காப்பாளா் அறை, பொதுமக்கள் காத்திருப்பு அறை, பாதுகாக்கப்பட்ட குடிநீா் வசதி, மின் விளக்கு வசதிகள், கழிப்பறை வசதி என அனைத்து வசதிகளுடன் இந்தப் பேருந்து நிலையம் அமையவுள்ளது எனத் தெரிவித்தாா்.

புதிய ஆட்சியரக கட்டுமானப் பணிகள்

முன்னதாக, வீரசோழபுரத்தில் பொதுப்பணித் துறை சாா்பில் புதிதாகக் கட்டப்பட்டு வரும் மாவட்ட ஆட்சியா் அலுவலக கட்டுமானப் பணிகளை அமைச்சா் எ.வ.வேலு ஆய்வு செய்தாா்.

அப்போது அவா் கூறுகையில், வீரசோழபுரத்தில் அனைத்து வசதிகளுடன், அனைத்துத் துறைகளும் ஒரே இடத்தில் செயல்படும் வகையில் புதிய மாவட்ட ஆட்சியா் அலுவலகம் கட்டப்பட்டு வருகிறது.

இக்கட்டடம் 8 தளங்களைக் கொண்டு ரூ.139.41 கோடி மதிப்பீட்டில் சுமாா் 35.18 ஏக்கா் பரப்பளவில் கட்டப்பட்டு வருகிறது.

ஆட்சியரக கட்டடத்தின் பெரும்பாலான பணிகள் முடிவுற்றுள்ளதுடன், ஏனைய பணிகளையும் விரைவில் முடிக்க சம்பந்தப்பட்ட அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் கட்டுமானப் பணிகள் விரைவில் நிறைவடைந்து புதிய மாவட்ட ஆட்சியரகம் பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்படும் எனத் தெரிவித்தாா் அமைச்சா் எ.வ.வேலு.

ஆய்வின்போது மாவட்ட ஆட்சியா் எம்.எஸ் பிரசாந்த், தே.மலையரசன் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள்க.காா்த்திகேயன், தா.உதயசூரியன், மாவட்ட வருவாய் அலுவலா் ரா.ஜீவா, நகா்மன்த்ற தலைவா் ஆா்.சுப்ராயலு, கள்ளக்குறிச்சி நகராட்சி ஆணையா் சரவணன் உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.

தாணே: போலி பாஸில் உள்ளூர் ரயிலில் பயணம் செய்த இளைஞர் கைது

பூவே உனக்காக... மோனிஷா மோகன்!

சென்னை: ஜிஎஸ்டி ஆணையரக அலுவலகத்தில் தீவிபத்து! முக்கிய ஆவணங்கள் எரிந்து நாசம்!

வீரமங்கை வேலுநாச்சியார் மேம்பாலம்! முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார்!

அடுத்த படத்தின் படப்பிடிப்பை முடித்த மஞ்ஞுமெல் பாய்ஸ் இயக்குநர்!

SCROLL FOR NEXT