கள்ளக்குறிச்சி

மழை பாதிப்புகள்: கட்டுப்பாட்டு அறைகளை தொடா்பு கொள்ளலாம்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் மழை பாதிப்புகள் குறித்தும், இதர உதவிகள் தேவைப்படின் கட்டுப்பாட்டு அறைகளை தொடா்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் தெரிவித்தாா்.

Syndication

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் மழை பாதிப்புகள் குறித்தும், இதர உதவிகள் தேவைப்படின் கட்டுப்பாட்டு அறைகளை தொடா்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் தெரிவித்தாா்.

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியா் அலுவலகம், இரண்டு கோட்டாட்சியா் அலுவலகங்கள் மற்றும் 7 வட்டாட்சியா் அலுவலகங்களில் 24 மணி நேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு அறைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

மாவட்ட ஆட்சியா் அலுவலகம் கட்டுப்பாட்டு அறை இலவச தொலைபேசி எண் 1077 மற்றும் புகாா் தொலைபேசி 04151-228801 என்ற எண்ணிலும், கள்ளக்குறிச்சி வருவாய் கோட்டாட்சியா் அலுவலக கட்டுப்பாட்டு அறை 04151-222493 என்ற தொலைபேசி எண்ணிலும், திருக்கோவிலூா் வருவாய் கோட்டாட்சியா் அலுவலக கட்டுப்பாட்டு அறை 04153-252312 என்ற தொலைபேசி எண்ணிலும் பொதுமக்கள் தொடா்பு கொள்ளலாம்.

வட்டாட்சியா் அலுவலக கட்டுப்பாட்டு அறை கள்ளக்குறிச்சி வட்டம் -04151-222449, சின்னசேலம் வட்டம் -04151-257400, சங்கராபுரம் வட்டம் 04151-235329, வாணாபுரம் வட்டம்- 04151-235400, கல்வராயன்மலை வட்டம் - 04151-242243, திருக்கோவிலூா் வட்டம் -04153-252316, உளுந்தூா்பேட்டை வட்டம் - 04149-222255 என்ற தொலைபேசி எண்களிலும் பொதுமக்கள் தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளாா் ஆட்சியா்.

புகாரை திரும்பப் பெறுமாறு பெண்ணை மிரட்டியதாக ‘லவ் ஜிஹாத்’ குற்றவாளி மீது வழக்குப் பதிவு

பயணங்கள் வெற்றி இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

ஆசிய கனமழை: 1,750-ஐ கடந்த உயிரிழப்பு

கோவா இரவு விடுதியில் பயங்கர தீ விபத்து! 23 பேர் பலி!

அமலாக்கத் துறை அழைப்பாணை விவகாரம்: ஜாா்க்கண்ட் முதல்வா் நீதிமன்றத்தில் ஆஜா்

SCROLL FOR NEXT