கல்வராயன்மலை காவல் சிறப்பு உதவி ஆய்வாளா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.
கல்வராயன்மலை வட்டத்துக்கு உள்பட்ட கரியாலூா் காவல் நிலையத்தில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வந்தவா் சக்திவேல்.
இவரது ஒழுங்கு நடவடிக்கையை கட்டுப்படுத்தும் பொருட்டு, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் க.ச.மாதவன் அவரை பணியிடை நீக்கம் செய்து சனிக்கிழமை உத்தரவிட்டாா்.