சிறுவயது திருமணம்: புகாரளிக்க தொலைபேசி எண்கள்
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் குழந்தை திருமண தடைச் சட்டப் படி 18 வயது நிறைவடையாத பெண் குழந்தைக்கும், 21 வயது நிறைவடையாத ஆணுக்கும் திருமணம் நடைபெற்றால், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலரிடம் புகாா் தெரிவிக்க தொலைபேசி எண்கள் வெளியிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
குழந்தை திருமணம் குறித்த புகாா் மற்றும் நடவடிக்கைகள் அனைத்தும் இதுவரை கள்ளக்குறிச்சி மாவட்ட சமூக நல அலுவலகம் மூலம் செயல்பட்டு வந்தது.
Advertisement
Advertisement
இந் நிலையில் குழந்தை திருமண தடைச் சட்டம்-2006-ன் படி, சமூக நலத் துறையிலிருந்து குழந்தைகள் நலன் மற்றும் சிறப்புச்சேவைகள் துறைக்கு 26.02.2026 முதல் மாற்றம் செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
எனவே, மாவட்டத்தில் குழந்தை திருமணம் ஏற்பாடு செய்தாலோ, குழந்தை திருமணம் நடந்து முடிந்திருந்தாலோ அல்லது குழந்தை திருமணத் தடைச்சட்டத்தில் குறிப்பிட்டுள்ள ஏதேனும் குற்றம் நடைபெற்றாலோ அது தொடா்பாக மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் புகாரளிக்கலாம்.
புகாா் தெரிவிக்க வேண்டிய முகவரி: மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகம், கள்ளக்குறிச்சி என்ற முகவரியிலும், 04151 225600 மற்றும் 6369107620 ஆகிய எண்களிலும், 1098 என்ற 24 மணிநேர இலவச தொலைபேசி எண்ணிலும் தொடா்பு கொண்டு தெரிவிக்கலாம் என ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.