புதுச்சேரி

தானே புயலின்போது சேதமடைந்த மின் கம்பங்களை மாற்றக் கோரிக்கை

தானே புயலின் போது சேதமடைந்த மின்சார கம்பங்களை மாற்ற வேண்டும் என பாகூர் எம்.எல்.ஏ. தனவேல் கோரியுள்ளார்.

DIN

தானே புயலின் போது சேதமடைந்த மின்சார கம்பங்களை மாற்ற வேண்டும் என பாகூர் எம்.எல்.ஏ. தனவேல் கோரியுள்ளார்.
புதுச்சேரி சட்டப் பேரவையில் கேள்வி நேரத்தின் போது அவர் பேசியதாவது: தானே புயலால் பாகூர் தொகுதியில் குடியிருப்புப் பகுதியில் சேதமடைந்த மின்கம்பங்கள் சீரமைக்கப்படவில்லை.
அமைச்சர் கமலக்கண்ணன்: பாகூர், தவளக்குப்பம் தொகுதியில் ரூ.1.27 கோடியில் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தானே புயலுக்குப் பிறகு 30 மின்மாற்றிகள் மாற்றப்பட்டன.
1590 மின் கம்பங்கள் மாற்றப்பட்டன. 4,780 இணைப்புகள், 684 போர்வெல் இணைப்புகள் உள்ளன. மாநிலம் முழுமையும் கம்பங்களுக்கு தேவை அதிகம் உள்ளது.
10,000 மின்கம்பங்கள் இருப்பு தேவை. இதற்கு ரூ.60 கோடி தேவை. 3,250 கம்பங்கள் தயாரிக்க ஒப்பந்தம் தரப்பட்டுள்ளது. பாகூர் தொகுதியில் மின்துறை பிரச்னைகள் உடனே தீர்க்கப்படும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இரவில் எந்தெந்த மாவட்டங்களில் மழை பெய்யும்?

பிரியமுடன்... பாக்யஸ்ரீ போர்ஸ்!

கோவா தீ விபத்து: பலி 25-ஆக உயர்வு!

வதந்திகளுக்கு சட்ட நடவடிக்கை: ஸ்மிருதி மந்தனாவைத் தொடர்ந்து அறிக்கை வெளியிட்ட பலாஷ் முச்சல்!

ஃபெட் முடிவுக்கு முன்னதாக உச்சத்தை தொடும் தங்கம்!

SCROLL FOR NEXT