செட்டிப்பட்டில் மின்கசிவு காரணமாக ஏற்பட்ட தீ விபத்தில் மூன்று குடிசைகள் எரிந்து சேதமடைந்தன.
திருக்கனூர் அடுத்த செட்டிப்பட்டு புதுநகரைச் சேர்ந்த கூலித் தொழிலாளி மனோகர். இவரது குடிசை வீடு மின் கசிவு காரணமாக திடீரென தீப்பிடித்து எரிந்தது. காற்று பலமாக வீசியதால், அருகிலிருந்த மூர்த்தி, காமாட்சி ஆகியோரது குடிசை வீடுகளும் தீப்பற்றி எரிந்தன.
திருக்கனூர் மற்றும் திருபுவனை தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து வந்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்தத் தீ விபத்தில் 3 குடிசை வீடுகளும் எரிந்து தீக்கிரையானதில் ரூ. 2 லட்சம் மதிப்பிலான பொருள்கள் சேதமடைந்தன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.