புதுச்சேரி மண்டல இந்தியன் வங்கி சார்பில் நிதியியல் கல்வி வார விழா அரியாங்குப்பத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.
அனைத்து வங்கிகள் சார்பிலும் கல்வி வார விழா கொண்டாட ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது. அதன்படி, புதுச்சேரி முன்னோடி வங்கியான இந்தியன் வங்கி சார்பில் கல்வி வார விழா நடைபெற்றது. துணை மண்டல மேலாளர் ராஜகோபால், மண்டல மேலாளர் வீரராகவன் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.
வங்கி நடைமுறைக்குத் தேவையான உங்கள் வாடிக்கையாளர்களை தெரிந்து கொள்ளுங்கள், வங்கி மற்றும் வங்கி தீர்ப்பாயத்திடம் எவ்வாறு புகார் தருவது, கடன் வாங்குதல், திருப்பிச் செலுத்துதல் தொடர்பான வழிமுறைகள், பணமில்லா பரிவர்த்தனை எளிதாக செய்ய உதவும் நடைமுறைகள், யுபிஐ பயன்பாடு, குறித்து விளக்கப்பட்டது.
மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அதிகாரிகள், நிதிசார் கல்வி ஆலோசகர்கள், வங்கி மேலாளர்கள், பொதுமக்கள் பங்கேற்றனர்.
கிராமப்புறங்களிலும் ஆங்காங்கே உள்ள வங்கிக் கிளைகள் மூலம் நிதியியல் கல்வி வார விழா நடைபெறவுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.