புதுச்சேரி

புதிய குடும்ப அட்டை: அரசு மீது அதிமுக புகார்

போலி குடும்ப அட்டைகளை அச்சிட்ட நிறுவனத்துக்கே, மீண்டும் புதிய அட்டைகள் அச்சிடும் பணி தரப்பட்டுள்ளதாக, புதுச்சேரி சட்டப்பேரவையில் அதிமுக குற்றம் சாட்டியது.

DIN

போலி குடும்ப அட்டைகளை அச்சிட்ட நிறுவனத்துக்கே, மீண்டும் புதிய அட்டைகள் அச்சிடும் பணி தரப்பட்டுள்ளதாக, புதுச்சேரி சட்டப்பேரவையில் அதிமுக குற்றம் சாட்டியது.
புதுச்சேரி சட்டப் பேரவையில் சிவப்பு நிற குடும்ப அட்டைகள் தொடர்பாக புதன்கிழமை நடைபெற்ற விவாதம்:
அன்பழகன் (அதிமுக): கடந்த இரு ஆண்டுகளாக புதிதாக குடும்ப அட்டை கோரி அளிக்கப்பட்ட விண்ணப்பங்கள் எத்தனை? எத்தனை அட்டைகள், யார் மூலம் புதிதாக தரப்பட்டன?
அமைச்சர் கந்தசாமி: குடும்ப அட்டைகள் துறை மூலமே தரப்படுகின்றன. மஞ்சள் நிற அட்டை வைத்திருக்க வேண்டியோர் சிவப்பு நிற அட்டை வைத்துள்ளனர். அது தவறானது. அது குறித்து சர்வே செய்யப்படும்.
அன்பழகன்: குறிப்பிட்ட 6 தொகுதிகளில் 85 சதவீதம் பேர் சிவப்பு நிற குடும்ப அட்டைகளை வைத்துள்ளனர். உணவு பாதுகாப்புத் திட்டத்தில் கிராமப் பகுதியில் 75 சதவீதமும், நகரப் பகுதியில் 50 சதவீதமும் சிவப்பு நிற அட்டைகள் இருக்கலாம். மொத்தம் 3.37 லட்சம் குடும்ப அட்டைகள் உள்ளன.
அதன்படி, 1.70 லட்சம் சிவப்பு நிற அட்டைகள் தான் உள்ளன. இன்னும் பத்து சதவீதம் வரை தரலாம். மத்திய அரசு திட்டப்படியே சிவப்பு நிற அட்டைகளை தரலாம்.
குடும்ப அட்டை அச்சடிக்கும் பணி சென்னையிலுள்ள தனியார் நிறுவனத்துக்கு அளிக்கப்பட்டுள்ளன. அவர்களுக்கு அட்டை அச்சடித்ததற்கு ரூ.12.40 கோடி அரசு தந்துள்ளது.
அவர்கள் போலியாக அட்டை அச்சடித்துள்ளனர். எனவே, இப்பணியை புதுச்சேரி அரசு அச்சகத்துக்கு தரலாம்.
அமைச்சர் கந்தசாமி: இதுதொடர்பாக துறை இயக்குநர் போலீஸில் புகார் தந்து வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
அன்பழகன்: தவறு செய்த நிறுவனத்துக்கே இப்பணியை தொடர்ந்து தருகிறீர்கள். போலியான குடும்ப அட்டை மூலம் பலரும் சென்டாக் மூலம் மருத்துவத்திலும் நுழைந்துள்ளனர். இதிலும் அரசு இழப்பு ஏற்படுகிறது.
அமைச்சர் கந்தசாமி: நடவடிக்கை எடுக்கப்படும்.
அன்பழகன்: புகார் குற்றச்சாட்டு பதிவாகி ஆறு மாதங்களாகி விட்டன. ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?
அமைச்சர்: உறுதியாக நடவடிக்கை எடுப்போம்.
அன்பழகன்: அதேபோல் ரேஷன் கடை ஊழியர்களுக்கு சம்பளம் போடவில்லை. ஒதுக்கப்படும் நிதி என்னவானது? அரிசியாவது மாதம்தோறும் வழங்குங்கள்.
அமைச்சர் கந்தசாமி: கண்டிப்பாக வழங்கப்படும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சென்னசமுத்திரம் கிருஷ்ணா் கோயிலில் பாலாலயம்

இந்து முன்னணியினா் ஆா்ப்பாட்டம்: 60 போ் கைது!

5,142 ஏக்கா் சம்பா நெற்பயிா் மூழ்கியுள்ளது: திருவள்ளூா் ஆட்சியா்

உரிமையாளர் அடைய முடியாத உரிமை

செங்கம் ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி கோயில் மகா கும்பாபிஷேகம்

SCROLL FOR NEXT