புதுச்சேரி

வேளாண் அறிவியல் நிலைய ஊழியர்கள் முற்றுகைப் போராட்டம்

ஊதியம் வழங்கக் கோரி, வேளாண் அறிவியல் நிலையத்தை ஊழியர்கள் புதன்கிழமை முற்றுகையிட்டு  போராட்டம் மேற்கொண்டனர்.

DIN

ஊதியம் வழங்கக் கோரி, வேளாண் அறிவியல் நிலையத்தை ஊழியர்கள் புதன்கிழமை முற்றுகையிட்டு  போராட்டம் மேற்கொண்டனர்.
புதுவை வேளாண் அறிவியல் நிலைய ஊழியர்களுக்கு கடந்த 3 மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை. இதனால் அவர்கள் பல கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே, சம்பளம் வழங்கக் கோரி, வேளாண் அறிவியல் நிலையத்தை புதன்
கிழமை 2ஆவது நாளாக  முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
குடும்பத்துடன் வந்து அதிகாரிகளிடம் தங்கள் பிள்ளைகளை ஒப்படைக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனையடுத்து, வில்லியனூர் வட்டாட்சியர் மேத்யூ பிரான்சிஸ் போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.  மாலைக்குள் சம்பளம் வழங்கப்படும் என அவர் அளித்த உறுதியை ஏற்று போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்துசென்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பராமரிப்புப் பணி: கும்மிடிப்பூண்டி, சூலூர்பேட்டை செல்லும் ரயில்கள் ரத்து!

சென்னை திரும்புவோருக்கு இன்று சிறப்பு ரயில்கள் இயக்கம்!

ஈரோடு: டிச. 16-ல் விஜய் சுற்றுப்பயணம்!

சொல்லப் போனால்... இண்டிகோவும் ஏகபோகங்களும்!

புகாரை திரும்பப் பெறுமாறு பெண்ணை மிரட்டியதாக ‘லவ் ஜிஹாத்’ குற்றவாளி மீது வழக்குப் பதிவு

SCROLL FOR NEXT