புதுச்சேரியில் மொத்தம் 49 துறைகளுக்கு உள்பட்ட 373 அரசு வாகனங்கள் பழுதாகி பயனின்றி உள்ளன என போக்குவரத்துத் அமைச்சர் எப்.ஷாஜஹான் தெரிவித்தார்.
சட்டப்பேரவையில் இதுதொடர்பாக நடைபெற்ற விவாதம்:
லட்சுமி நாராயணன் (காங்.): புதுச்சேரி அரசுத் துறை மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்களில் பயன்படாத பழுதடைந்த இரண்டு சக்கர, மூன்று சக்கர, நான்கு சக்கர வாகனங்கள் எண்ணிக்கை எவ்வளவு? எத்தனை ஆண்டுகள் பயன்படுத்தப்படாமல் உள்ளன.
அமைச்சர் ஷாஜகான்: புதுச்சேரி அரசு வாகனப் பணிமனை போக்குவரத்துத் துறையில் 49 அரசுத் துறைகளைச் சேர்ந்த 373 வாகனங்கள் பயன்படாமல் உள்ளன. சுமார் 4 ஆண்டுகள் அப்படியே உள்ளன. அந்தந்த துறைகள் அரசாணை பெற்றதும் ஏலம் விடப்படும்.
லட்சுமி நாராயணன்: போலீஸ் குடியிருப்புகளில் வாகனங்கள் பத்து ஆண்டுகளாக அப்படியே கிடக்கின்றன. பணம் இல்லை என்று கூறிவிட்டு வீணாக போகிறது பணம். ஏலம் விடலாம்.
அமைச்சர் ஷாஜஹான்: உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.