புதுவையில் வழிப்பறி செய்யும் நோக்கத்தில் கத்தியுடன் பதுங்கி இருந்த 4 இளைஞர்களை போலீஸார் கைது செய்தனர்.
புதுவையில் தொடர் குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டு வரும் குற்றவாளிகள் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், லாஸ்பேட்டை இன்ஸ்பெக்டர் தனசேகரன் தலைமையிலான போலீஸார் செவ்வாய்க்கிழமை சேத்திலால் நகரில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது, அங்குள்ள பொதுக்கழிப்பிட பகுதியில் கத்தியுடன் பதுங்கியிருந்த 4 பேரை சுற்றி வளைத்தனர்.
அவர்களிடம் விசாரணை நடத்தியதில் அதே பகுதியைச் சேர்ந்த சுரேஷ் (19), தினேஷ் பாபு (27), மாணிக்கம் (28), டோபிகானாவில் வசிக்கும் செந்தில்குமார் (27) என்பது தெரியவந்தது.
இதில், சுரேஷ் பாலிடெக்னிக் மாணவர் என்பதும் மற்ற 3 பேரும் கூலி வேலை செய்வதும் தெரிந்தது. அவர்களிடம் இருந்து 4 கத்திகளை பறிமுதல் செய்தனர்.
வழிப்பறி மற்றும் சங்கிலி பறிப்பில் ஈடுபடும் நோக்கத்துடன் அவர்கள் கத்திகளுடன் பதுங்கி இருந்ததாக கருதப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.