புதுச்சேரி

பஞ்சாலைத் தொழிலாளர்களுக்கு பஞ்சப்படி முழுமையாக வழங்க வேண்டும்: பாஸ்கர் எம்.எல்.ஏ.

பாரதி, சுதேசி பஞ்சாலைத் தொழிலாளர்களுக்கு பஞ்சப்படியை (ஐடிஏ) முழுமையாக வழங்க வேண்டும் என அதிமுக எம்.எல்.ஏ. பாஸ்கர் கோரிக்கை விடுத்தார்.

தினமணி

பாரதி, சுதேசி பஞ்சாலைத் தொழிலாளர்களுக்கு பஞ்சப்படியை (ஐடிஏ) முழுமையாக வழங்க வேண்டும் என அதிமுக எம்.எல்.ஏ. பாஸ்கர் கோரிக்கை விடுத்தார்.
 சட்டப்பேரவையில் உடனடிக் கேள்வி நேரத்தில் இதுதொடர்பாக நடைபெற்ற விவாதம்:
 பாஸ்கர்: பாரதி, சுதேசி ஆலைகளில் உற்பத்தி இருந்தும் தொழிலக பஞ்சப்படி தரப்பட்டது. ஏஎஃப்டி ஆலையில் உற்பத்தி இல்லாததால் ஐடிஏ தரப்படவில்லை. தற்போது பாரதி ஆலையில் உற்பத்தி அதிகரித்துள்ளது. தொழிலக பஞ்சப்படியை முழுமையாக தர வேண்டும்.
 1.3.2016-இல் ஐடிஏ தர நீதிமன்றம் உத்தரவிட்டது. உற்பத்தி இருந்தும் ஏன் தரவில்லை.
 சிவா: பாரதி, சுதேசி ஆலையில் தொழிலாளர்களுக்கு ஏன் ஐடிஏ தரக்கூடாது.
 லட்சுமி நாராயணன்: நிதி நிலைமை சீரானவுடன் மீதமுள்ள 50 சதவீத பஞ்சப்படியை வைப்பு நிதியில் சேர்த்து வழங்கலாம்.
 அமைச்சர் ஷாஜஹான்: முதலில் 50 சதவீதம் ஐடிஏ அறிவிக்கப்பட்டுள்ளது. நிதிநிலை சீரானவுடன் மீதமுள்ள ஐடிஏ தரப்படும். முதலில் ஊழியர்களை முழுமையாக பணியாற்றுமாறு கூறுங்கள்.
 பாஸ்கர்: அந்த ஆலையில் கேமராக்கள் வைத்து கண்காணிக்கின்றனர்.
 முதல்வர்: பாரதி, சுதேசி ஆலையில் தொழிலாளர்கள் பிரச்னை தொடர்பாக பேசப்பட்டது. ஜாப் ஒர்க் தான் தரப்படுகிறது. ஒப்பந்தப்புள்ளி மூலம் மேலும் உற்பத்தியை அதிகரித்து அவர்களுக்கான பஞ்சப்படி தரப்படும்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

3 வடிவ போட்டிகளிலும் சதம்: சாதனைப் பட்டியலில் இணைந்த ஜெய்ஸ்வால்!

இந்த வாரம் கலாரசிகன் - 07-12-2025

மன்னாா்குடி அருகே அரசு, தனியார் பேருந்துகள் மோதி விபத்து: 12 போ் காயம்

அறிவறிந்த மக்கட்பேற்றின் மாண்பு!

எல்லாம் வல்லது கல்வி!

SCROLL FOR NEXT