புதுச்சேரியில் புதன்கிழமை மாலை திடீரென பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதனால், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
புதுச்சேரியில் கடந்த சில மாதங்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. வெயிலின் தாக்கம் காரணமாக மக்கள் வீட்டிலேயே முடங்கும் நிலை இருந்தது. இதனால் மக்கள் பெரும் துயரத்திற்கு ஆளாகி வந்தனர்.
இந்த நிலையில், புதன்கிழமை மாலை கருமேகங்கள் சூழ்ந்து, திடீரென பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்தது.
சுமார் ஒரு மணி நேரம் பெய்த இந்த மழையால் சாலையின் இருபுறங்களிலும் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. வெப்பத்தின் கொடுமைக்கு ஆளான பொதுமக்கள் மழை காரணமாக ஏற்பட்ட குளிர்ச்சியால் மகிழ்ச்சி அடைந்தனர். இதேபோல மதகடிப்பட்டு, திருபுவனை, மண்ணாடிபட்டு, சோம்பட்டு உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.