புதுச்சேரி

புதை சாக்கடைத் திட்டம் எப்போது முடிக்கப்படும்?

புதுச்சேரியில் புதை சாக்கடைத் திட்டம் எப்போது முடிக்கப்படும் என பல்வேறு கட்சி எம்.எல்.ஏக்கள் கேள்வி எழுப்பினர்.

தினமணி

புதுச்சேரியில் புதை சாக்கடைத் திட்டம் எப்போது முடிக்கப்படும் என பல்வேறு கட்சி எம்.எல்.ஏக்கள் கேள்வி எழுப்பினர்.
 பேரவையில் உடனடிக் கேள்வி நேரத்தின் போது நடந்த விவாதம்:
 ஜெயமூர்த்தி: அரியாங்குப்பம் தொகுதி தேங்காய்த்திட்டு, முருங்கப்பாக்கம் பகுதிகளில் புதை சாக்கடைத் திட்டம் செயல்படுத்தப்படுமா?
 சிவக்கொழுந்து: லாஸ்பேட்டை தொகுதியிலும் புதை சாக்கடைத் திட்டம் நிலுவையில் உள்ளது,
 பாஸ்கர்: முதலியார்பேட்டை தொகுதியில் பணி நிலுவையில் உள்ளது. பல பகுதிகளில் புதை சாக்கடை திட்டப் பணிகளே தொடங்கப்படவில்லை.
 அன்பழகன்: 7 ஆண்டுகள் ஆகியும் ஏன் புதை சாக்கடைத் திட்டம் மக்கள் பயன்பாட்டுக்கு வரவில்லை. எனது தொகுதியில் ரூ.18 கோடி சுத்திகரிப்பு நிலையம் கட்டப்பட்டுள்ளது. ஆனால் அது தற்போது வீணாகி வருகிறது.
 சிவா: தொடர்புடைய தொகுதி எம்.எல்.ஏக்கள், அதிகாரிகளை அழைத்து திட்டம் நிலை குறித்து ஆராய வேண்டும்.
 அசனா: புதுவையில் மட்டுமே புதை சாக்கடை திட்டம் செயல்படுத்தப்படுகிறது. காரைக்கால் மாவட்டம் சேர்க்கப்படுமா?
 அமைச்சர் நமச்சிவாயம்: திட்ட வரைவு தயாரிக்கப்பட்டுள்ளது. இதன் பின்னர் தான் நிதி எவ்வளவு என்பது தெரியும். எந்தப் பகுதி சேர்க்கப்பட்டுள்ளதோ அங்கு தான் தற்போது பணி மேற்கொள்ளப்படும். குறிப்பிட்ட காலத்துக்குள் முடிக்கப்படும். இந்த மாதத்துக்குள் வீடுகளுக்கு இணைப்பு தரப்படும்.
 காரைக்கால் மாவட்டத்துக்கும் புதை சாக்கடை திட்டத்தை கொண்டு வர முடிவெடுக்கப்பட்டுள்ளது.
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

“கன்னி ராசி நேயர்களே!" இந்த வார ராசிபலன்களைத் தெரிந்துகொள்ளுங்கள்! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்!

என்றும் இளமை... நதியா!

ராகுல் தகுதியற்றவர் என்பது இந்தியா கூட்டணித் தலைவர்கள் கருத்து: பாஜக

புதின் வருகையையொட்டி இப்படியெல்லாம் செய்வீர்களா? ரஷிய பத்திரிகையாளர்கள் அதிருப்தி!

ஸ்வயம் தோ்வுகளுக்கான மையங்களை சொந்த மாநிலத்திலேயே ஒதுக்க வேண்டும்: மத்திய அரசுக்கு வில்சன் எம்.பி. கடிதம்

SCROLL FOR NEXT