புதுச்சேரி

மருத்துவ பட்டமேற்படிப்பு: சென்டாக் மூலம் தேர்வானவர்களை சேர்க்காவிட்டால் நடவடிக்கை; அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ்

மருத்துவ பட்டமேற்படிப்புகளில் சென்டாக் கலந்தாய்வு மூலம் தேர்வானவர்களை சேர்க்காவிட்டால் கல்லூரிகளின் தடையில்லா சான்று ரத்து செய்யப்படும் என சுகாதாரத் துறை அமைச்சர்

தினமணி

மருத்துவ பட்டமேற்படிப்புகளில் சென்டாக் கலந்தாய்வு மூலம் தேர்வானவர்களை சேர்க்காவிட்டால் கல்லூரிகளின் தடையில்லா சான்று ரத்து செய்யப்படும் என சுகாதாரத் துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் எச்சரித்தார்.
 மருத்துவ பட்டமேற்படிப்பு இடங்கள் சேர்க்கை தொடர்பாக அதிமுக குழுத் தலைவர் அன்பழகன் சட்டப்பேரவையில் பேசியதாவது:
 புதுச்சேரி மாநிலத்தில் மருத்துவ பட்டமேற்படிப்பில் தனியார் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் 159 உள்ளன. இதில் இடங்களைத் தேர்வு செய்த மாணவர்களுக்கு கல்விக் கட்டணமாக ரூ.3 லட்சம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால், ரூ.30 லட்சம் கட்டணம் செலுத்தினால் தான் சேர்க்கை தரப்படும் என தனியார் கல்லூரிகள் மறுத்துள்ளன. இதனால், புதுவை மாணவ, மாணவிகள் எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளது.
 அமைச்சர் மல்லாடி: கல்விக் கட்டணக் குழுவுக்கு கடந்த பிப்ரவரி 25-ம் தேதி கல்விக் கட்டணத்தை நிர்ணயிக்க அரசு கடிதம் எழுதியது. சென்டாக் கலந்தாய்வு மூலம் இதுவரை 76 பேர் இடங்களைத் தேர்வு செய்துள்ளனர். அவர்களுக்கு சேர்க்கை அனுமதியை மறுக்கும் கல்லூரி நிர்வாகங்களுக்கு தடையில்லா சான்று ரத்து செய்யப்படும்.
 என்.ஆர்.பாலன்: முதல் கலந்தாய்வில் இடங்களை தேர்வு செய்த மாணவர்களை கல்லூரி நிர்வாகங்கள் சேர்க்கும் வரை இரண்டாவது கலந்தாய்வை நடத்தக்கூடாது. மாணவ, மாணவிகளிடம் அதிகத் தொகையை வசூலிக்கக்கூடாது.
 இதேபோல, காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் லட்சுமிநாராயணன், ஜெயமூர்த்தி, வையாபுரி மணிகண்டன் ஆகியோரும் சென்டாக் கலந்தாய்வில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் மாணவர்கள் சேருவதை உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தினர்.
 முதல்வர் நாராயணசாமி: கல்விக் கட்டண குழுவை உயர்நீதிமன்றம் தான் நியமிக்கிறது. கட்டணத்தை நிர்ணயிக்கும்படி மாநில அரசு குழுவுக்கு உத்தரவிட முடியாது. பரிந்துரை கடிதம் தான் அனுப்ப முடியும்.
 சென்டாக் அரசு ஒதுக்கீட்டில் மாணவ, மாணவிகள் சேர வேண்டும் என்பதில் அரசு உறுதியாக உள்ளது. இதற்காக தான் விதிகளை மீறும் கல்லூரிகளுக்கு தடையில்லாச் சான்று ரத்து செய்யப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
 இதையடுத்து பேரவைத் தலைவர் வைத்திலிங்கமும் சென்டாக் கலந்தாய்வின்படி மாணவர்கள் சேருவதை உறுதி செய்ய வேண்டும் என்றார்.
 
 
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வெடி மருந்துகளை பதுக்கியவா் கைது

கொடிநாள் நிதியளிப்பது குடிமக்களின் கடமை: முதல்வர் ஸ்டாலின்

வத்தலகுண்டு அருகே கரடி தாக்கியதில் விவசாயி காயம்

லாரி உரிமையாளா்கள் வேலை நிறுத்தம் தற்காலிகமாக ஒத்திவைப்பு

ஷாங்காய் நகரில் புதிய இந்திய தூதரக கட்டடம் திறப்பு! 2020 கல்வான் பள்ளத்தாக்கு மோதலுக்குப் பின்..!

SCROLL FOR NEXT