புதுச்சேரி

மீனவ பெண் தொழிலாளர்களுக்கு சலுகைகள் தர கோரிக்கை

மீனவ பெண்கள் உள்பட அமைப்பு சாரா பெண் தொழிலாளர்களுக்கு சலுகைகள் தர வேண்டும் என தேசிய மீனவர் பேரவை கோரியுள்ளது.

தினமணி

மீனவ பெண்கள் உள்பட அமைப்பு சாரா பெண் தொழிலாளர்களுக்கு சலுகைகள் தர வேண்டும் என தேசிய மீனவர் பேரவை கோரியுள்ளது.
 அதன் தலைவர் மா.இளங்கோ, மகளிர் மேம்பாட்டுத் துறை அமைச்சர் மேனகா காந்திக்கு எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:
 நாடு முழுவதும் மீன் அறுவடைக்குப் பிறகு சுத்தப்படுத்துதல், சந்தைப்படுத்துதல், மதிப்புக்கூட்டு செய்தல் போன்ற உழைக்கும் பணிகளில் ஈடுபடும் சுமார் 1.5 கோடி இந்திய கடற்கரை மற்றும் உள்நாட்டு மீனவ சமுதாய மகளிர் நலனில் அக்கரை கொண்ட இயக்கம் என்ற முறையில் எங்கள் அமைப்பின் சார்பில் கீழ்காணும் ஆலோசனைகளை முன்வைக்கிறோம்.
 மீனவ மகளிர் உள்பட நாட்டில் உள்ள அனைத்து அமைப்பு சாரா உழைக்கும் பெண்களுக்கும், பேறுகால ஓய்வுக்கு ஏற்ற பேறுகால ஊதியத்தை மத்திய அரசே வழங்க சட்டம் இயற்ற வேண்டும்.
 ஆறு, குளம், குட்டை, ஏரி, அணை, நதி ஆகியவற்றில் மீன் உற்பத்தி செய்து மீன் அறுவடை செய்யும் உரிமையை அப்பகுதி வாழ் மீனவ சமுதாய பெண்களுக்கு வழங்க சட்டம் கொண்டு வர வேண்டும்.
 மகளிர் கல்வி, சமூக, பொருளாதார அந்தஸ்து பெற உதவும் வகையில் நாட்டில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்வி நிலையங்களில் உள்ள மருத்துவக் கல்வி இடங்களில் 50 சதம் இடத்தை மாணவிகளுக்கென ஒதுக்கீடு செய்ய சட்டம் கொண்டு வர வேண்டும்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரசிகர்கள் மனதைக் கொள்ளையடித்த 'சிம்ரன்'... கஜோல்!

மேக் இன் இந்தியாவில் வேலையின்மை அதிகரிப்பு: அகிலேஷ் யாதவ்

கயல்விழி... ஐஸ்வர்யா மேனன்!

மத்திய அமைச்சரவையில் இடம் பெற்றபோது மெட்ரோ, எய்ம்ஸ் பற்றி ஏன் சிந்திக்கவில்லை?: தமிழிசை கேள்வி

ஜம்மு-காஷ்மீரில் காட்டுத் தீயால் வெடித்த கண்ணிவெடிகள்

SCROLL FOR NEXT