புதுவை அருகே மோட்டார் சைக்கிள் திருடியவரை ரோந்து போலீஸார் விரட்டிப் பிடித்தனர்.
அரியாங்குப்பம் போலீஸார் செவ்வாய்க்கிழமை இரவு மாஞ்சோலை வழியாக ரோந்து சென்றபோது, அந்த வழியாக மோட்டார் சைக்கிள் ஒன்று அதிவேகமாக சென்றுள்ளது. உடனே ரோந்து போலீஸார் மோட்டார் சைக்கிளை நிறுத்துமாறு சைகை காட்டியுள்ளனர்.
ஆனால், மோட்டார் சைக்கிள் நிற்காமல் சென்றது. உடனே போலீஸார் விரைந்து சென்று மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்ற நபரை பிடிக்க முயன்றுள்ளனர். அப்போது அந்த நபர், மோட்டார் சைக்கிளை கீழே போட்டுவிட்டு தப்பி ஓட முயன்றுள்ளார். போலீஸார் அவரை விரட்டிப் பிடித்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், விழுப்புரம் மாவட்டம் விக்ரவாண்டியைச் சேர்ந்த ஏழுமலை (25) என்பதும், அவர் ஓட்டி வந்தது திருட்டு மோட்டார் சைக்கிள் என்பதும் தெரிய வந்தது.
இதனையடுத்து, ஏழுமலையை கைது செய்த போலீஸார், அவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள், செல்லிடப்பேசி உள்ளிட்டவற்றைப் பறிமுதல் செய்தனர்.
கைது செய்யப்பட்ட ஏழுமலை மீது அரியாங்குப்பம், வில்லியனூர் உள்ளிட்ட காவல் நிலையங்களில் மோட்டார் சைக்கிள் திருட்டு வழக்குகள் உள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.