புதுச்சேரி

ஆன்லைன் முறையில் முதியோர் உதவித்தொகை விண்ணப்பங்கள் வழங்க எதிர்ப்பு

புதுச்சேரியில் ஆன்லைன் மூலம் முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட விண்ணப்பங்களை வழங்குவதற்கு எம்.எல்.ஏக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

தினமணி

புதுச்சேரியில் ஆன்லைன் மூலம் முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட விண்ணப்பங்களை வழங்குவதற்கு எம்.எல்.ஏக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
 புதுச்சேரி சட்டப்பேரவை கூட்டம் புதன்கிழமை மீண்டும் கூடியது. அப்போது ஆன்லைன் மூலம் உதவித்தொகை விண்ணப்பங்களை வழங்குவது குறித்த பிரச்னையை அதிமுக உறுப்பினர் அன்பழகன் எழுப்பினார்.
 அன்பழகன் (அதிமுக): முதியோர் உதவித் தொகை தர வேண்டும் என்றால் ஆதார் அட்டை கண்டிப்பாக கேட்கின்றனர். பயனாளிகளுக்கு விண்ணப்பத்தை தரவில்லை. எம்.எல்.ஏக்கள் விண்ணப்பங்களில் கையெழுத்து கூட போடமுடியவில்லை. ஆன்லைன் மூலம் ஏன் பயனாளிகள் விண்ணப்பிக்கும் முறை உள்ளது. எந்த அலுவலகத்திலும் பதிவிறக்கும் செய்யும் வசதி இல்லை.
 அமைச்சர் கந்தசாமி: உதவித்தொகை விண்ணப்பங்கள் வழங்குவதில் பழைய முறையே தொடரும்.
 ஜெயமூர்த்தி, சிவா: இதற்கான உத்தரவை யார் போட்டது.
 அமைச்சர் கந்தசாமி: தகவல் தொழில்நுட்பத் துறை செயலாளர் தான் இந்த ஏற்பாடுகளை செய்தார்.
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரசிகர்கள் மனதைக் கொள்ளையடித்த 'சிம்ரன்'... கஜோல்!

மேக் இன் இந்தியாவில் வேலையின்மை அதிகரிப்பு: அகிலேஷ் யாதவ்

கயல்விழி... ஐஸ்வர்யா மேனன்!

மத்திய அமைச்சரவையில் இடம் பெற்றபோது மெட்ரோ, எய்ம்ஸ் பற்றி ஏன் சிந்திக்கவில்லை?: தமிழிசை கேள்வி

ஜம்மு-காஷ்மீரில் காட்டுத் தீயால் வெடித்த கண்ணிவெடிகள்

SCROLL FOR NEXT