சென்டாக் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என என்.ஆர். காங்கிரஸ் எம்எல்ஏ அசோக் ஆனந்து வலியுறுத்தினார்.
புதுச்சேரி பேரவையில் புதன்கிழமை நடைபெற்ற விவாதத்தின் போது உறுப்பினர்கள் பேசியதாவது:
பேராசிரியர் ராமச்சந்திரன்: மாஹேயில் குடிநீர்த் தட்டுப்பாடு தலைவிரித்து ஆடுகிறது. பந்தக்கல் கிராமத்தில் மழைநீர் சேகரிப்புத் திட்டத்தை தொடங்க வேண்டும். முதல்வர் இந்தத் திட்டத்தை செயல்படுத்தி, குடிநீர் பிரச்னையில் இருந்து காக்க வேண்டும். மாஹே அரசு மருத்துவமனையில் சிறுநீரக சிகிச்சை டயாலிசிஸ் பிரிவை ஏற்படுத்த வேண்டும்.
எதனால் இது தடைப்படுகிறது எனத் தெரியவில்லை. இதற்கான இடமும் உள்ளது.
போக்குவரத்து பிரச்னை உள்ளதால் சிற்றுந்து வசதி ஏற்படுத்த வேண்டும். காரைக்காலில் இருந்து மாஹேவுக்கு நேரடியாக பேருந்து வசதி செய்து கொடுக்க வேண்டும்.
அசோக் ஆனந்து (என்.ஆர்.காங்): 30-ம் தேதி சென்டாக் மருத்துவ பட்டமேற்படிப்பு சேர்க்கை முடிவடைகிறது. இதற்கான கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும்.
அமைச்சர் கமலக்கண்ணன்: மாணவர் சேர்க்கை தேதி நீட்டிக்கப்படும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.