புதுச்சேரி

வீடு சூறை: 2 ரெளடிகள் கைது

குற்ற வழக்குகளில் சிக்கியதால் பேச மறுத்த நண்பன் வீட்டை சூறையாடிய 2 ரெளடிகளை போலீஸார் கைது செய்தனர்.

தினமணி

குற்ற வழக்குகளில் சிக்கியதால் பேச மறுத்த நண்பன் வீட்டை சூறையாடிய 2 ரெளடிகளை போலீஸார் கைது செய்தனர்.
 புதுவை கொசப்பாளையத்தைச் சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர்கள் அசோக் (எ) அந்தோனி (28). இவரது நண்பர்கள் கொசப்பாளையம் சிலம்பு (30), ரெட்டியார் பாளையம் ஜோசப்சுந்தர் (36). இருவரும் கொலை வழக்கில் சம்பந்தப்பட்டதால் அசோக் அவர்களுடன் பேசுவதை தவிர்த்து வந்துள்ளார். இதனால் சிலம்பும் ஜோசப் சுந்தரும் ஆத்திரமடைந்தனர். அடிக்கடி அசோக்குடன் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
 இதுகுறித்து அசோக் தனது நணர்பர்களான ரெட்டியார்பாளையத்தைச் சேர்ந்த அருள், ஜெய் ஆகியோரிடம் தெரிவித்துள்ளார். அருளும், ஜெய்யும் சிலம்பை இதுகுறித்து கேட்டு, இனி அசோக்கிடம் பேச்சுவார்த்தை வைத்துக் கொள்ளக்கூடாது எனத் தெரிவித் துள்ளனர்.
 இதனால் கடும் ஆத்திரமடைந்த சிலம்பும், ஜோசப்சுந்தரமும் செவ்வாய்க்கிழமை அசோக் வீட்டில் இல்லாதபோது அவரது வீட்டிற்குள் சென்று அங்குள்ள டிவி பிரிட்ஜ் போன்ற பொருள்களை அடித்து உடைத்து சூறையாடினர்.
 இதுகுறித்து அசோக் உருளையன்பேட்டை போலீஸில் புகார் தெரிவித்தார். போலீஸார் வழக்குப் பதிவு செய்து சிலம்பு மற்றும் ஜோசப் சுந்தரத்தை கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மது விற்ற 2 பெண்கள் கைது

குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்த பெண் கா்ப்பம்: உறவினா்கள் முற்றுகை

உடல் பருமன் பாதிப்பு அதிகரிப்பு... இருக்கை பிரச்னையால் அவதிப்படும் பேருந்துப் பயணிகள்!

கேரம் போட்டிகளில் தங்கம் வென்ற தமிழக வீராங்கனைகள்! சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!

ஓடை கால்வாய் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

SCROLL FOR NEXT