நீக்கப்பட்ட பொதுப்பணித் துறை தாற்காலிக ஊழியர்கள், மீண்டும் பணி வழங்க வலியுறுத்தி புதன்கிழமை கஞ்சி காய்ச்சும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடந்த என்.ஆர். காங்கிரஸ் ஆட்சியில் பொதுப் பணித் துறையில், தினக் கூலி ஊழியர்களாக பணியமர்த்தப்பட்ட 2612-க்கும் மேற்பட்டோர், முறைகேடாக நியமிக்கப்பட்டதாகக் கூறி தேர்தல் துறையால் பணி நீக்கம் செய்யப்பட்டனர்.
இந்நிலையில், பேரவைத் தேர்தல் முடிந்த நிலையில் பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள் தங்களுக்கு மீண்டும் பணி வழங்கக் கோரி பல கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் புதன்கிழமை பணி வழங்கக் கோரி பொதுப்பணித் துறை தலைமை அலுவலகம் எதிரே 100-க்கும் மேற்பட்ட பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள் கஞ்சி காய்ச்சும் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். சங்கத் தலைவர் தெய்வீகன் தலைமை வகித்தார்.
தங்களது கோரிக்கையை நிறைவேற்றவில்லை என்றால் போராட்டத்தை தீவிரப்படுத்துவோம் எனத் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.